எட்டு வருட காலத்தில், 33 வயது பெண்ணை, ஆண் ஒருவர் 14 முறை கட்டாயப்படுத்தி பெண்ணை கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளதாகவும் தற்போது அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் காவல்துறையினர் வியாழக்கிழமையன்று தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் எழுதிய தற்கொலைக் குறிப்பை காவல்துறையினர் மேற்கோள்காட்டி உள்ளனர்.






தென்கிழக்கு டெல்லியின் ஜெய்த்பூர் பகுதியில் ஜூலை 5 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். இந்தியில் எழுதப்பட்ட தற்கொலைக் குறிப்பில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னுடன் உடல் ரீதியான உறவை ஏற்படுத்திக் கொண்டதாகவும், ஆனால் தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டதாகவும், தற்கொலையைத் தவிர வேறு வழியில்லை என குறிப்பிட்டுள்ளார்.


மேலும், குற்றம் சாட்டப்பட்டவருடன் பாதிக்கப்பட்ட பெண் லிவ்-இன் உறவில் இருந்ததாகவும் கூறியுள்ளார். பின்னர், அவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


நொய்டாவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. துணை காவல்துறை ஆணையர் (தென்கிழக்கு) ஈஷா பாண்டே இதுகுறித்து கூறுகையில், "ஜூலை 5 அன்று, ஜெய்த்பூரில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாக அழைப்பு வந்தது. 


ஒரு பெண் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து காவல்துறையினர் குழு ஒன்று அங்கு விரைந்தது. உடனடியாக அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார். தூக்கில் தொங்க பயன்படுத்திய நாற்காலியும், இறந்தவரின் கைத்தொலைபேசியும் கைப்பற்றப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், அந்த பெண் கடந்த 7-8 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தது தெரியவந்தது.


பீகாரில் உள்ள முசாபர்பூரில் வசிக்கும் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பின் அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. தற்கொலைக் குறிப்பை எய்ம்ஸ் மருத்துவர்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சவுத் எக்ஸ்டென்ஷனில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணின் கணவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். 


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண