Delhi Crime: கணவன் மனைவி இடையேயான மோதல் மோசமான வன்முறைக்கு வழிவகுத்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


கணவனின் ஆணுறுப்பை துண்டாக்கிய மனைவி


வடக்கு டெல்லியில் கணவர் உடன் ஏற்பட்ட சண்டையில் அவரது அந்தரங்க உறுப்பை மனைவி துண்டித்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல்நிலை சீராக உள்ளது எனவும், ஆபத்தான நிலையை கடந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். PTI இன் அறிக்கையின்படி, அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1 க்கு இடையில் நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் குறித்து ரூப் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.


நடந்தது என்ன?


பாதிக்கப்பட்டவர்   உண்மையில் பீகாரைச் சேர்ந்தவர் ஆவார். சமீபத்தில் தான் தனது மனைவியுடன் அவர் டெல்லிக்கு குடிபெயர்ந்ததுள்ளார். அங்கு சக்தி நகரில் பணம் செலுத்தி தங்கக் கூடிய விருந்தினர் விடுதியில் அவர்  உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு, குடிபோதையில் இருந்த அந்த நபர், தனது மனைவியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து கணவர் உறங்கிய பிறகு வீட்டிற்கு வந்த அந்த பெண், கோபத்தில் ”கணவரின் அந்தரங்கப் பகுதியில் கூர்மையான பொருளால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்" என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.


போலீசாரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவரும் அவரது மனைவியும் தங்கள் மூன்றாவது திருமண உறவினர் இருந்தனர். காயங்களுடன் முதலில் பாரா இந்து ராவ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட பெண் தற்போது தப்பியோடியுள்ளார்.  அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


கணவரின் அந்தரங்க உறுப்பை கடித்த  பெண்:


இதேபோல், உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் தனது கணவரின் அந்தரங்க உறுப்பை கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த அந்த பெண்ணின் கணவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியா டுடே செய்தியின்படி, 34 வயதான கணவர் ராமு நிஷாத், சம்பவத்திற்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மேலும் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.


இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) இரவு, இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட கணவர் தொடர்ந்து வற்புறுத்தியதால், மனைவி தனது கணவரின் அந்தரங்க உறுப்பை கடித்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.


ஆரம்பத்தில், அந்த நபர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால், பின்னர் அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால், சிறந்த வசதிகளை கொண்ட மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கணவருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 326 இன் கீழ் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காகவும், கிரிமினல் மிரட்டலுக்காக பிரிவு 506 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.