டெல்லி வடகிழக்கு பகுதி நந்த் நக்ரியில், 25 வயது இளைஞர் ஒருவர், தனது தற்கொலை முயற்சியை பேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீம் செய்தார்.


விரைந்த காவல்துறை:


இச்சம்பவம் தொடர்பாக திங்கட்கிழமை இரவு 9.06 மணியளவில் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து,  இரவு 9.09 மணியளவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு ஒரு குழு சென்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.


டெல்லி காவல்துறையின் புலனாய்வு பிரிவு, நந்த் நாக்ரி காவல் நிலையத்துக்கு இச்சசம்பவம் குறித்து தெரிவித்தது. மேலும், சமூக வலைப்பின்னல் தளம், பேஸ்புக் ஐடியுடன் தொடர்புடைய இரண்டு தொடர்பு எண்களையும் வழங்கியதாக, துணை போலீஸ் கமிஷனர் ஜாய் திர்கி தெரிவித்தார்.


இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வழியில், அந்த நபரை மீட்பதற்காக அவசரகால பதில் வாகனம், பீட் ஊழியர்கள் மற்றும் பி.சி.ஆர் ஆகியவற்றை குறிப்பிட்ட முகவரிக்கு வரவழைத்ததனர்.


இளைஞர் மீட்பு:


வீட்டிற்கு சென்று பார்த்தபோது, 25 வயதான இளைஞர் மயக்க நிலையில் கட்டிலில் கிடந்தார்.


அந்த இளைஞர், அவரது பையில் டேப்லெட்டுகள் வைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. அந்த நபர், சுமார் 30 முதல் 40 மாத்திரைகளை உட்கொண்டதாக தெரிவித்தார், அவற்றில் காலி உறைகள் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டன என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் என்றென்றும் குட்பை. இன்றிற்குப் பிறகு இந்தக் கண்கள் திறக்கப்படாது என்றும் எழுதி வைத்திருந்துள்ளார்.


பின்னர், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து, அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.


கடந்த 8ம் தேதி முதல் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர்.


முன்னதாக, அக்டோபர் 21, 2021 அன்று, 43 வயது நபர் ஒருவர் தனது தற்கொலை முயற்சியை பேஸ்புக்கில் நேரலை செய்தார்.


மதியம் 1.30 மணிக்கு தற்கொலை முயற்சியின் லைவ் வீடியோவை ஒருவர் வெளியிட்டதாக முகநூலில் இருந்து போலீசாருக்கு அவசர மின்னஞ்சல் வந்தது. அவர்கள் முதலில் கணக்குடன் இணைக்கப்பட்ட எண்ணைப் பெற்று மேற்கு டெல்லியின் ரஜௌரி கார்டனில் உள்ள நபரைக் கண்டறிந்தனர்.


பாதிக்கப்பட்ட பெண் தைராய்டு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 50 பாட்டில் சிரப்பை உட்கொண்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றதாகவும், கடந்த ஆண்டு அவர் வேலையை இழந்ததாகவும் தெரியவந்தது. பல்வேறு உடல் உபாதைகளையும் சந்தித்து வந்த அவர், மன உளைச்சலில் இருந்தார்.


Suicidal Trigger Warning..


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.. புரம்,
சென்னை600 028.
தொலைபேசி எண்(+91 44 2464 0050+91 44 2464 0060)


 


Also Read: Crime: நீதிமன்றத்தில் நீதிபதியை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளருக்கு 10 ஆண்டு சிறை


Also Read: சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.1.5 கோடி மோசடி - திருவண்ணாமலையில் 100 இளைஞர்கள் சாலை மறியல்