டெல்லியில் பயணி ஒருவர் தான் அணிந்திருந்த விக் முடிக்குள் 30 லட்சம் மதிப்பிலான தங்கத்தை மறைத்து கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் அபுதாபியில் இருந்து வந்த பயணி ஒருவர், தன் தலையில் அணிந்திருந்த விக்குக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தார். இதனையறிந்த அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரது விக்கை பிரித்து, அவரது தலையில் ஒட்டி வைக்கப்பட்டிருந்த தங்கத்தை பிரித்து எடுத்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.அபுதாபியில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் மதிப்பு 630.45 கிராம் ஆகும். அதன் விலை 30.55 லட்சம் ஆகும். இது சம்பவம் தொடர்பாக பயணியை கைது செய்துள்ள அதிகாரிகள் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் சுங்கத்துறை ஆணையர் அலுவலகம், தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அளித்த பதிலில், டெல்லியில் கடந்த 11 ஆண்டுகளில் 2,500 க்கும் மேற்பட்ட கடத்தல் வழக்குகளில் கிட்டத்தட்ட 3,000 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான சம்பவங்கள் சர்வதேச விமான நிலையத்தில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக 324 வெளிநாட்டவர்கள் உட்பட, 1,632 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்