29 வயது பெண் மருத்துவர் தற்கொலை! கணவர் கைது – காரணம் என்ன?

வடமேற்கு டெல்லியில் உள்ள ரோஹினியில் 29 வயது பெண் ஒருவர் தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

 

Continues below advertisement

வடமேற்கு டெல்லியில் உள்ள ரோஹினியில் 29 வயது பெண் ஒருவர் தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் கணவர் ஓஷோ பிரஜாபதி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், “உயிரிழந்த பெண் ஒரு பல் மருத்துவர். அவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் சில தனிப்பட்ட சிரமங்களை அனுபவிப்பதாகக் குறிப்பிடப்பட்டாலும், அவர் தீவிர நடவடிக்கை எடுக்கத் தூண்டிய சரியான சூழ்நிலைகள் விசாரணைக்குப் பிறகு தெரியவரும்.

பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 85 மற்றும் 108-ன் கீழ் வடக்கு ரோகிணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.

இதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை 26 வயது பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  அவர் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் பெண்ணின் குடும்பத்தினர் விசாரிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து போலீசார் கூறுகையில், “டெல்லியின் ரோகிணி செக்டார் 8-ல் 26 வயதுடைய பெண் மருத்துவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. தற்போது அந்தப் பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

 

 

தற்கொலை எதற்கும் தீர்வல்ல.

Helplines

Vandrevala Foundation for Mental Health

9999666555 or help@vandrevalafoundation.com

TISS iCall        022-25521111 (Monday-Saturday: 8 am to 10 pm)

 

Continues below advertisement
Sponsored Links by Taboola