Crime :மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரை துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் திலிகுரி பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்ஸ்சாருல். இவரது மனைவி ரேணுகா காத்தூன் (20). இவர்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனாது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இந்த பெண்ணை கடந்த 24-ஆம் தேதியில் இருந்து காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அவரது கணவரான முகமது அன்னஸ்சாருலிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
நடந்தையில் சந்தேகம்
அதன்படி, " மனைவி ரேணுகா அழகு பயிற்சி மையத்தில் ப்யூடிசியனாக பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் முன்பின் தெரியாத ஆண்களிடம் ரேணுகா பேசுவது, கணவர் முகமது அன்ஸ்சாருலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இருவருக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் ரேணுகாவை அழகு பயிற்சிக்கு செல்ல வேண்டாம் எனவும் கூறியிருந்தார். இதனை ரேணுகா கேட்காமல் நாள்தோறும் அழகு பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தார். இவர் ஆண்களிடமும் பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
துண்டுதுண்டாக வெட்டிய கொடூரம்
இதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளில் மனைவி ரேணுகாவை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள கால்வாய் பகுதிக்கு முகமது அன்ஸ்சாருல் சென்றுள்ளார். அங்கு வைத்து மனைவியை துண்டுதுண்டாக வெட்டியுள்ளார். பின்னர், உடல் பாகங்களை சாக்குபையில் கட்டி அருகில் இருந்த கால்வாயில் வீசியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, முகமது அன்ஸ்சாருலை கைது செய்து, கால்வாயில் ரேணுகாவின் உடல் பாகங்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அதிகரிக்கும் குற்றங்கள்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையத்துக்கு சுமார் 31 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து ஒப்பிடுகையில் இதுவே அதிமாகும். கடந்த 2014ல் 30,906 புகார்கள் மகளிர் ஆணையத்தில் பதிவாகி உள்ளது. நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில் 16,876 புகார்கள் கிடைக்கப் பெற்றன. இரண்டாவது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் 3,004 புகார்கள் கிடைக்க பெற்றன. மூன்றாவது இடமாக மகாராஷ்ராவில் 1,381 புகார்கள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க