நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கணவருடன் தகராறு ஏற்பட்டு பிரிந்து தனியாக அவரது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பினியாக இருந்த இளம் பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டு ஈரோடு மாவட்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சிப்பதாக சேலம் மாநகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதிக்கு சென்ற காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.



அப்போது சீலநாயக்கன்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் குழந்தை கொடுக்கப்பட்டது. அப்பொழுது அங்கிருந்த காவல்துறையினர் மூவரையும் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்களை டவுன் அனைத்தும் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் நாமக்கல் தேக்கவாடி பகுதி சேர்ந்த மதியழகன் அவரது மனைவி வளர்மதி, இவர்களது நண்பர் ஈரோட்டைச் சேர்ந்த லதா என்பது தெரியவந்தது. 



சட்டவிரோதமாக குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்து இடைத்தரகர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்ய முயற்சி, குழந்தை கடத்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து இரண்டு பெண்கள் உட்பட மூவரையும் கைது செய்தனர். அப்போது இவர்கள் மூவரிடமும் காவல்துறையினர் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். இதையடுத்து இவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.