விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு அண்ணா நகர் பகுதி சேர்ந்த முகமது ஆசிக் பெட்மார்ட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 9 மாதங்கள் ஆன நிலையில் அவரது சொந்த ஊரான மயிலம் அடுத்த ஆலகிராமத்திற்கு கடந்த 10 தினங்களுக்கு முன்பு கருவுற்ற தனது மனைவி ஷபியா பானுவை அழைத்துச் சென்றார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று வீட்டிற்கு வந்த முகமது ஆசிக் சிறிது நேரம் ஓய்வெடுத்தபின் புறப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை தனது மனைவியுடன் வீட்டிற்கு வந்தவர் வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்த நிலையில் உள்ளே நுழைந்த பொழுது புகை மண்டலமாக காட்சி அளித்தது.

 

உடனே கூச்சலிடுவே அக்கம் பக்கத்தினர் திண்டிவனம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உள்ளே பற்றி எரிந்த தீயை அணைத்தபின் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோ திறந்து இருப்பதைக் கண்ட முஹம்மது ஆசிக் அதிர்ச்சி அடைந்தார். இரவில் இருந்த 10 சவரன் நகை ரொக்க பணம் 5000 கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த தீவிபத்தில் கட்டில், பீரோ, பெட், ஏசி, இன்வெட்டர், டிரஸ்சிங் டேபிள் ஆகியவை எரிந்து சேதமடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.