Crime: தெலங்கானாவில் 15 வயது சிறுமியை வீடு புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


15 வயது சிறுமி:


பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின.


சமீபத்தில் கூட, ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுமி ஒருவர் உயிரோடு எரிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, தெலங்கானாவில் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.  தெலங்கானா மாநிலம் ஹைதரபாத் லால் பஜார் பகுதியில் பெற்றோருடன் 15 வயது சிறுமியும், அவரது சகோதரரும் வசித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இவர்களது பெற்றோர் உயிரிழந்துள்ளனர். இதனால், அவர்கள் அதே வீட்டில் தனியாக தான் வசித்து வந்தனர். பின்னர் சிறிது நாட்களுக்கு பிறகு அவர்களது உறவினர் ஒருவர் அவர்களை அழைத்துச் சென்றனர். மீர்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு இருவரையும் அழைத்துச் சென்றனர்.


8 பேர் கும்பல்:


அங்கு இருக்கும் ஒரு துணிக்கடையில் சிறுமி விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார். காலை வேலைக்கு சென்று மாலை தான் வீட்டிற்கு திரும்புவார். இதனை அவர் வழக்கமாக கொண்டு வந்தார். சிறுமியின் சசோதரர் பிளெக்ஸ் போர்டு கடையில் வேலை செய்து வருகிறார்.  15 வயறு சிறுமி தினமும் வேலைக்கு சென்றுக் கொண்டிருக்கும்போது 8 பேர் கொண்ட கும்பல் அவரை நோட்டமிட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று காலை சிறுமியுடம் அவர்களது பக்கத்து வீட்டில் இருக்கும்  3 பேருடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.


அப்போது, 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டிற்குள் நுழைந்தது. அவர்களில் 3 பேர் சிறுமியை மாடிக்கு அழைத்து சென்றனர். மற்றவர்கள் சிறுமியின் சகோதரன் மற்றும் நண்பர்களை கத்தி முனையில் மிரட்டியுள்ளனர். பின்னர், 3 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனை அடுத்து 8 பேர் கொண்ட குமபல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதனை அறிந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் மீர்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.


புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வரை 4 பேரை கைது செய்த போலீசார் மற்றவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  15 வயது சிறுமியை 8  பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.