Crime : மனைவி மீதான சந்தேகத்தால் அவரது ஆண் நண்பரை 15 துண்டாக கணவர் வெட்டிக் கெலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை அவரின் காதலர் அப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடல் பாகங்களை 35 துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதுபோன்ற பல மாநிலங்களில் அரகேறி வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் இதுபோன்ற ஒரு கொடூர கொலை நடந்துள்ளது.
மனைவி மீது சந்தேகம்
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்தவர் மீலால் பிரஜாபதி (40). இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்தார். அதே பகுதியில் வசித்து வருபவர் அக்ஷய் குமார் (25). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அக்ஷய் குமார் வேலைக்காக உ.பி.யில் வசித்து வந்துள்ளார். இவர் மீலால் பிரஜாபதியின் மனைவியுடம் நட்பாக பழகி வந்துள்ளார். மனைவி அக்ஷய் குமாருடன் பழகி வருவது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.
இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சில நேரங்களில் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பலமுறை கூறியும் மனைவியின் நண்பர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த மீலால், அவரது மனைவியின் நண்பரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
15 துண்டுகளாக வெட்டிய கொடூரம்
இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி மீலால் மகளுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது. மீலால் வேலைக்கு சென்றிருப்பதால் அவரது மனைவி மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். சிகிச்சையில் இருந்த மகளை கவனித்து வந்துள்ளார். இதற்கிடையில், தனது மனைவி மருத்துவனையில் இருப்பதாக கூறி, மனைவியின் நண்பர் அக்ஷய் குமாரை வீட்டிற்கு வர சொல்லி அழைத்தார்.
15 துண்டுகளாக வெட்டிக்கொலை:
பின்பு, வீட்டிற்கு வந்த அக்ஷய் குமாருக்கு குளிப்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். இதை குடித்த அகஷய் குமார் சில மணி நேரங்களிலே மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து, வீட்டில் இருந்த கோடாரியால் அக்ஷய் குமாரின் உடலை 15 துண்டுகளாக கொடூரமாக வெட்டியுள்ளார்.
பின்னர் நள்ளிரவு நேரத்தில் உடல் துண்டுகளை 3 சாக்கு பையில் கட்டிக் கொண்டு அவரது ஆட்டோவில் புஸ்டா பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு இருக்கும் மேம்பாலத்தின் கீழ் கொட்டப்பட்டிருக்கும் குப்பைகளில் வீசிவிட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து, நேற்று காலை குப்பைகளை தெரு நாய்கள் கிளறி கொண்டிருக்கும் போது உடல் பாகங்கள் கிடப்பதை பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.
உடல் பாகங்களை மீட்டு, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். அப்போது கொலை செய்யப்பட்டது அக்ஷய் குமார் என்பது தெரியவந்தது. பின்னர், வீட்டில் இருந்த மீலால் பிரஜாபதி கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.