மதுரையில் ரூ.70 ஆயிரம் லஞ்சத்தை பெற்ற சார்பதிவாளர் - போலீசார் பொறியில் சிக்கியது எப்படி?

திருமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூபாய் 70 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக சார்பதிவாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

திருமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக லஞ்சம் வாங்கியதாக சார்பதிவாளர் உட்பட இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரூபாய் 70,000 பணம் வங்கிக் கணக்கு மூலம் வாங்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அவர்களை கைது செய்து விசாரணை நடைபெற்றது.

திருமங்கலம் சார்பதிவாளர் அலுவலகம்

 
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கிழவனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவருக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் 18 சென்ட் இடத்தை செந்தில்குமார் என்பவர், கிரையம் செய்வதாக திருமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகி உள்ளார். கடந்த ஜனவரி 24- ஆம் தேதி பத்திரப்பதிவு செய்வதற்கு வந்துள்ளார். அப்போது முந்தைய நிலத்தின் உரிமையாளர் ஆனந்தராஜ் பத்திரம் காணவில்லை, என தேனி மாவட்டம் தென்கரை காவல் நிலைய ஆய்வாளிடம் சான்று வாங்கியது, உண்மைதானா என விசாரித்தது பின்பு பதிவு செய்வதாக சார்பதிவாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 14-ஆம் தேதி உண்மைத்தன்மை அறிந்து விசாரணை முடித்துள்ளார்.
 
 

லஞ்ச ஒழிப்பு போலீசார் பாலமணிகண்டனை பிடித்து விசாரணை

 
பின்னர் செந்தில்குமார் 21ஆம் தேதி பத்திரம் செய்ய வந்துள்ளார், அவரிடம் ரூபாய் ஒரு லட்ச ரூபாய் லஞ்சப் பணம் கேட்டுள்ளார். பின்னர் பேரம் பேசி ரூபாய் 70 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டார். இந்நிலையில்  செந்தில்குமார் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவரிடம் பத்திரப்பதிவு எழுத்தர் பால மணிகண்டனிடம் ரூபாய் 70,000 வங்கி கணக்கு மூலம் அனுப்பியுள்ளார். அதே நேரத்தில் செந்தில்குமார் பெயருக்கு பத்திரப்பதிவு  முடிந்து விட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பாலமணிகண்டனை பிடித்து விசாரணை செய்த போது, சார் பதிவாளர் பாண்டியராஜன் கேட்டதால்தான் வாங்கி உள்ளதாக வாக்குமூலம் மூலம் அளித்தார். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பாண்டியராஜன் மற்றும் பால மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
 
மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்..,” மதுரையில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலை தூக்கி இருக்கிறது. குறிப்பாக பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிகளவு பணங்கள் பெறப்படுகிறது. நேரடியாக பெறவில்லை என்றாலும் பத்திர எழுத்தர்கள், பெட்டிக் கடைகள் என மறைமுகமாக லஞ்சம் பெறப்படுகிறது. எனவே இதையும் கண்டறியும் வகையில் செயல்பட வேண்டும் என தெரிவித்தனர்.
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola