நெல்லை மாவட்டம் பணகுடி அருகே அண்ணா நகரை சேர்ந்தவர் சொரிமுத்து. இவர்  தனியார் செங்கல் சூலை ஒன்றில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த சூழலில் இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகன் வசந்தகுமார் (வயது 15) என்பவர் மட்டும் 8-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு  பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் செல்போனில் வசந்தகுமார் அடிக்கடி கேம் விளையாடிக் கொண்டிருந்ததோடு அதில் அதிக நேரத்தை செலவழித்து வந்ததாகவும் தெரிகிறது. 


இந்நிலையில் நேற்று மதியம் சொரிமுத்து வேலையை முடித்துவிட்டு சாப்பிட வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வசந்தகுமார் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அதனை பார்த்த தந்தை சொரிமுத்து அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வசந்தகுமார் வீட்டின் அருகில் இருந்த அரளிச் செடியில் உள்ள காய்களை பறித்து அரைத்து குடித்துள்ளார். பின்னர் இது குறித்து அறிந்த உறவினர்கள் வசந்தகுமாரை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவனையில் அனுமதித்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்த நிலையில் 15 வயது சிறுவன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர



யூடியூபில் வீடியோக்களை காண