அதிமுக பொறுப்பாளர், குட்டி ரவுடி
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (38). இவர் அதிமுகவில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் பதவி வகித்து வந்தார். இவர் மீது ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
நண்பர்களுடன் மது அருந்தி நாகராஜ்
இந்த நிலையில் நாகராஜ் கட்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த விஜயகாந்த், கண்ணன் உள்ளிட்ட நான்கு பேருடன் கிளாய் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் பின்னால் பாழடைந்த கட்டிடத்தில் நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். அப்போது மது தீர்ந்து விட்டதாக கூறி விஜயகாந்த் , கண்ணன் உள்ளிட்ட இருவரையும் மது வாங்கி வர டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி உள்ளார்.
கொலை செய்யப்பட்ட சடலம்
பின்னர் இருவரும் மது வாங்கி கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது நாகராஜ் கழுத்து வயிற்றுப் பகுதிகளில் பலத்த வெட்டு காய்களுடன் கொலை செய்யப்பட்டு சடலமாக கடந்துள்ளார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த இருவரும் ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நாகராஜின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்
மது அருந்தியவர்கள் தலைமறைவு
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், நாகராஜுடன் மது அருந்திய நான்கு பேரும் தலைமறைவாக இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் கிளாய் பகுதியை சேர்ந்த செல்வகுமார், விஜய், ரெட் கார்த்தி மணிகண்டன் உள்ளிட்ட 4 பேர் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தலைமுறைவாக இருப்பதை கண்டறிந்து அங்கு சென்று சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் நான்கு பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.
திருவிழாவிற்காக வெட்டப்பட்ட ஆடு
கடந்த மாதம் கிளாய் பகுதியில் உள்ள எல்லேரி அம்மன் கோயில் திருவிழா நடந்துள்ளது. இதனை அதிமுகவை சேர்ந்த நாகராஜ் முன் நின்று திருவிழாவை நடத்தி உள்ளார். அப்போது 15 கட ஆடுகளை அம்மனுக்கு காவு கொடுத்து இறைச்சியை வீடு வீடாக பிரித்து விநியோகம் செய்துள்ளனர்.
கூடுதல் இறைச்சிக்காக சண்டை
அப்போது செல்வகுமார், விஜய், மணிகண்டன் உள்ளிட்டோர் மதுபோதையில் நாகராஜிடம் கூடுதலாக இறைச்சி கேட்டு ஆபாசமாக பேசி தகராறு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் தனது ஆதரவாளர்களுடன் ஆபாசமாக பேசியவர்களை சரமாரியாக தாக்கி அனுப்பி உள்ளார். இதனால் நாகராஜுக்கும் செல்வகுமாரின் நண்பர்களுக்கும் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.
கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்
சம்பவத்தன்று நாகராஜ், கட்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த விஜயகாந்த் கண்ணன் உள்ளிட்டோருடன் மது அருந்துவதை பார்த்து உள்ளனர். இதனை அறிந்து நாகராஜை கொலை செய்ய திட்டமிட்டு செல்வகுமார், விஜய் , ரெட் கார்த்தி மணிகண்டன் உள்ளிட்ட நான்கு பேரும் கத்தி வீச்சருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நாகராஜை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து நான்கு பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் நடத்தினர். மேலும் நாகராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ராமு என்பவரை டிஎஸ்பி சுனில் தலைமையிலான போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.