தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது காமராஜ் நகர். இங்கு கடந்த நவம்பர் 12 ஆம் தேதி கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகன் வீடு உட்பட அருகே உள்ள 3 வீடுகளில் புகுந்து மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்து சென்றனர். குறிப்பாக தங்க நகை மற்றும் பணம் என 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இவ்வழக்கை காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வந்தனர்.  இந்த  நிலையில் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஆலங்குளம் ஒன்றியக் குழு துணைத்தலைவர் வீரபுத்திரன் உட்பட 7 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இந்த 7 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் பணத்தின் மதிப்பு சுமார் 40 லட்சம் என காவல்துறை விசாரணயில் தெரிய வந்தது.


இந்த நிலையில் இங்குள்ள 10 வீடுகளில் கொள்ளை போனது தொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  மேலும் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இச்சூழலில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவரை கடந்த 10 ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.  மேலும் குன்னூரை சேர்ந்த ஜெரால்டு என்ற ஆரோக்கிய நாதன் நெல்லை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து ஆலங்குளம் போலிசார் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் கொள்ளையடித்த நகைகளை சஞ்சீவ் குமார், ஜெரால்டு ஆகியோர் மதுரையை சேர்ந்த வெங்கடேஷ், வைய கண்ணன், திண்டுக்கல்லை சேர்ந்த சங்கர் ஆகிய 3 நகை வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ததாக தெரிய வந்ததுள்ளது. இதனையடுத்து ஜெரால்டு மற்றும் நகை வியாபாரிகள் 3 பேர் என 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர், மேலும் அவர்களிடம் இருந்து 100 கிராம் தங்க நகைகளை மீட்டனர். மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கொள்ளையத்த நகைகளை நகை வியாபாரிகளிடம் விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண