தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருவதோடு புகையிலை பொருட்கள் கடத்தி செல்வோர் மற்றும் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நெல்லையில் ஆங்காங்கே வாகன சோதனையானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீசார் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதோடு விற்பனை செய்பவர்களை கைது செய்து குட்கா பொருட்களையும்  பறிமுதல் செய்து‌ வருகின்றனர்.
 
இந்நிலையில் வீரவநல்லூர் போலீசாருக்கு வீரவநல்லூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் குட்கா பொருட்களை மினி லாரியில் எடுத்து வந்து சப்ளை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அத்தகவலின் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று ஆய்வாளர் தலைமையில் போலீசார் காருக்குறிச்சி அருகே  வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.   அப்போது அங்கு வந்த மினி கண்டெய்னர் லாரியை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் கண்டெய்னர் லாரி உள்ளே இரகசிய அறை ஒன்று அமைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த அறையை திறந்து பார்த்ததில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.




அதில் சுமார் 12 இலட்சம் மதிப்புள்ள 574 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் புகையிலை பொருட்களை எடுத்து வந்த கரூர் மாவட்டம், சமத்துவபுரத்தை சேர்ந்த சிவக்குமார்(46), என்பவரை கைது செய்தனர். மேலும் புகையிலை கடத்தி வந்த லாரியையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.  லாரியில் இரகசிய அறை மூலம் புகையிலை கடத்தப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண