ஃபேஸ்புக் நண்பர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஃபேஸ்புக் நண்பர்கள்:


பீகார் மாநிலம், பாங்கா மாவட்டம், தோரையா காவல் நிலையத்திற்கு உட்பட்ட 16 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். பீகாரின் அண்டை மாநிலமான ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவரான மைனர் சிறுமி, குற்றம் சாட்டப்பட்ட இருபது வயது மதிக்கத்தக்க மூன்று இளைஞர்களுடன் சமூக ஊடக தளமான ஃபேஸ்புக்கில் நட்புடன் பழகி வந்துள்ளார்.


கூட்டுப்பாலியல் வன்கொடுமை:


மேலும் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் இளைஞர்களை சந்திக்க கடந்த மார்ச் 16 அன்று சிறுமி வந்த நிலையில், அன்றிரவு இளைஞர்கள் மூவரும் ஒன்றிணைந்து சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்நிலையில் இளைஞர்களிமிருந்து ஒருகட்டத்தில் தப்பிய சிறுமி, தோரையா காவல் நிலையத்தை அடைந்து புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர், இளைஞர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து வழக்கை விசாரித்து வருகின்றனர்.


அண்டை மாநில சிறுமி ஃபேஸ்புக் நண்பர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


முந்தைய சம்பவம்


இதேபோல் முன்னதாக 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி அவரை எரித்துக் கொன்று, சிறுமியின் பெற்றோரையும் சிறை வைத்த கொடூர சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தில் வசித்து வந்த 16 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் காதலித்து வந்த நிலையில், சிறுமி ஒரு கட்டத்தில் கருவுற்றுள்ளார். இந்நிலையில், சிறுமி கருவுற்றதை அடுத்து அந்த இளைஞர் சிறுமியைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளார். ஆனால் கருவுற்ற சிறுமி தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி இளைஞரிடம் கேட்கத் தொடங்க, அதற்கு இளைஞரும் அவரது குடும்பத்தினரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.


சிறுமி கொலை:


ஆனால் சிறுமி தொடர்ந்து இளைஞனுக்கு திருமணம் செய்துகொள்ளும்படி அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், இருவருக்கும் மோதல் வெடித்துள்ளது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த இளைஞர் சிறுமியை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார். மேலும் இளைஞர் தன் பெற்றோருடன் சேர்ந்து சிறுமியின் பெற்றோரை வீட்டுச் சிறையில் வைத்துள்ளார்.


ஆனால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக்  கூறி, இளைஞர் குடும்பத்திடம் இருந்து தப்பிய பெற்றோர் முன்னதாக காவல் நிலையத்துக்குச் சென்று புகார் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுமியின் தந்தை அளித்த சாட்சியங்களின்படி நால்வர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க: Assistant Professor Recruitment: 4,136 உதவி பேராசிரியர் காலி பணியிடங்கள்... விண்ணப்பிக்கும் தேதியை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம்...!