Crime: உடலுறவுக்கு மறுத்த காதலியை அவரது காதலன் ஸ்க்ரூடிரைவரால் கழுத்தில் பலமுறை குத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தொடரும் கொடூரங்கள்:


 சமீப காலமாகவே, குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நாட்டின் தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, இதேபோன்ற கொலை சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் நிகழ்வது மக்களை உச்சக்கட்ட அச்சத்தில் ஆழ்த்தியது.  


இப்படி நாளுக்கு நாள் ஒரு குற்றச் சம்பவங்கள் டெல்லியில் அரங்கேறி வருகிறது.  அந்த வரிசையில் தற்போது ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.  உத்தர பிரதேச மாநிலம் குருகிராமில் லின் இன் பார்ட்னரை அவரது காதலனே கொலை செய்ய முயற்சித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


என்ன நடந்தது? 


உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவம்குமார். இவர் கன்னோஜ் பகுதியில்  உள்ள ஒரு வாடகை வீட்டில்  வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச்  சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும்  லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். முன்னதாக, கணவரிடமிருந்து பிரிந்து வசித்து வந்த பெண், கன்னோஜ் பகுதியைச் சேர்ந்த சிவம் குமாரை சந்தித்தார். அப்போது தான், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.


இந்நிலையில், இருவரும் கன்னோஜ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில், சிவம் குமார், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி வந்தார். இதனை நம்பி அந்த பெண் அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். 


ஸ்க்ரூடிரைவர்:


ஆனால் சிவம் குமாருக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததாக தெரிகிறது. இந்த விஷயம் அந்த பெண்ணுக்கு தெரிய வந்ததும் நெருக்கமாக இருப்பதை தவிர்த்து வந்தார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சிவம் குமார் அந்த பெண்ணிடம் உடலுறவு கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. அப்படி தான், கடந்த வியாழன்கிழமை தன்னிடம் உடலுறவில் இருக்க வேண்டும் என்று வற்புறத்தியுள்ளார் விஜய் குமார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சிவம் குமார் அருகில் கிடந்த ஸ்க்ரூடிரைவரால் அந்த பெண்ணின் கழுத்தில் பலமுறை குத்தியுள்ளார்.


இதனை அடுத்து, அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் விஜய் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். உடலுறவுக்கு மறுத்த காதலியை அவரது காதலன் ஸ்க்ரூடிரைவரால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.