திமுக ஆதரவாளர் படுகொலை... மர்மநபர்கள் தப்பிஓட்டம்! தீவிர கைது வேட்டையில் காவல்துறை

Crime: வி.கே.குருசாமி தரப்பினர் சந்தேகப்படுவதால் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் மற்றும் புறநகர் என 2 தனிப்படைகள் அமைப்பு.

Continues below advertisement
மதுரையில் முன்னாள் திமுக மண்டல தலைவர் வி கே குருசாமியின் ஆதரவாளர் வீட்டினருகே வெட்டி படுகொலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

நான்கு பேர் கொண்ட கும்பல் படுகொலை செய்தது

மதுரை மேல் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் என்ற கிளாமர் காளி(30). இவர் மீது 10க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள்  மதுரையில் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளன. இவர் முன்னாள் தி.மு.க., மண்டல தலைவர் வி.கே குருசாமியின் ஆதரவாளர்.
 
கடந்த 20 நாட்களுக்கு முன்பாக மதுரை புறநகர் பகுதியான தனக்கன்குளம் அருகே உள்ள வெங்கல மூர்த்தி நகரில் குடியேறி இருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு இரண்டு டூவீலரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் இவரது வீட்டின் அருகே வைத்து இவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பித்து உள்ளனர். 
 
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் காளீஸ்வரன் உடலை கைப்பற்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். கடந்த ஆண்டு வி.கே குருசாமி பெங்களூருவில் உள்ள தனியார் உணவகத்தில் அமர்ந்து கொண்டிருந்த பொழுது 5 பேர் கொண்ட வெட்டி படுகொலை செய்ய முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.
 

கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

 
இந்நிலையில் தற்போது நடைபெற்ற கொலை சம்பவத்தில் வெள்ளைகாளி தரப்பினர் கொலை செய்திருக்கலாம் என வி.கே.குருசாமி தரப்பினர் சந்தேகப்படுவதால் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் மற்றும் புறநகர் என 2 தனிப்படைகள் அமைப்பு.
 
 
 
Continues below advertisement