Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்துவதற்கு உத்தரவிட கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு.
Continues below advertisement

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
Source : whats app
வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இதில் நீதிமன்றம் தலையிட விரும்ப வில்லை. எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை என தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Continues below advertisement
தமிழ்நாட்டில் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு வேண்டும்
தமிழ்நாடு சட்டப் பாதுகாப்பு இயக்க உறுப்பினர் சதீஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 69% இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தச் சட்டம் அரசியலமைப்பின் அட்டவணையின் கீழ் கொண்டுவரப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் தற்போது மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் மட்டுமே இடஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும். மேலும், பல ஆண்டுகளாக, இந்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. மேலும், பீகார், உள்ளிட்ட மாநிலங்களில் எடுக்கப்பட்டு உள்ளது. எனவே, 2020 அன்று வெளியிட்ட அரசாணை படி, தமிழ்நாட்டில் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.
நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்
இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், பீகார், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி உள்ளன. எனவே, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கூறினார். நீதிபதிகள் உத்தரவில், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்குதான் உள்ளது. வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இதில் நீதிமன்றம் தலையிட விரும்ப வில்லை. எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை என தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பாம்பன் பாலம் வேலை 100% முடிந்தது.. திறப்பு விழா நடத்த தயக்கம் ஏன்?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மனைவி ஆபாச படம் பார்த்து அதை செய்கிறார்.. விவாகரத்து கேட்ட கணவர் - நீதிமன்றம் சொன்னது என்ன?
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.