Crime: கேரளாவில் கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட மனிதனின் 2 கால்கள் வழக்கு தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் துண்டிக்கப்பட்ட நிலையில் மனிதனின் இரண்டு கால்களை போலீசார் கண்டெத்தனர். இந்த சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நீண்ட மாதங்களாக விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது இந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கண்டெடுக்கப்பட்ட இரண்டு கால்கள் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கனிஷ்கனின் கால்கள் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாக கனிஷ்கன் கும்பல் மற்றும் மற்றொரு ரவுடி கும்பலுக்கும் பிரச்சனை ஏற்பட்டு வந்தது. நீண்ட காலமாக இருந்த பிரச்னையில் கனிஷ்கனை அந்த கும்பலில் ஒருவர் கொலை செய்திருப்பர் என திருவனந்தவுரம் காவல் ஆணையர் ஸ்பர்ஜன் குமார் தெரிவித்தார்.
இருவர் கைது
மேலும் திருவனந்தபுரம் கழிவு சுத்திகரிப்பு நிலையத்தின் ஒரு பகுதியில் பிளாஸ்டிக் கவரில் சுத்தப்பட்ட நிலையில், இரண்டு கால்கள் மற்றும் வயிற்றுப்பகுதியும் கண்டெக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இரண்டு பேரும் கேரள மாநிலம் வலியத்துறையைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.
கனிஷ்கன் கொலைக்கு இவர்கள் இரண்டு பேர் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மனு ரமேஷ் என்பவருக்கும் கொல்லப்பட்ட கனிஷ்கன் என்பவருக்கும் முன்விரோம் இருப்பதாக கூறப்படுகிறது. கனிஷ்கன் கும்பல் மற்றும் மனு ரமேஷ் கும்பலுக்கும் இடையே தான் நீண்ட காலமாக பிரச்சனை ஏற்பட்டு வந்தது என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஷெஹான் ஷா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் திருவனந்தபுரத்தில் இறைச்சி கடை ஒன்று வைத்துள்ளார். இவர் மனு ரமேஷின் நெருங்கிய நண்பர் என்றும் கூறப்படுகிறது. கனிஷ்கனின் கொலைக்கு இவரும் உடந்தையாக இருந்தது விசாரணையில் அம்பலமானது. கனிஷ் உடலை வெட்டுவதற்கு அதனை அப்புறப்படுத்துவதற்கும் உதவியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது
நடந்தது என்ன?
மனு மற்றும் கனிஷ்கன் கும்பலுக்கு பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில், பிரச்னையை முடிக்க நினைத்தனர். அப்போது கனிஷ்கனை திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு மனு ரமேஷ் அழைத்தார். இருவருக்கும் சமாதான பேச்சுவார்த்தை எட்டாத நிலையில் மது போதையில் இருந்த மனு ரமேஷ், கனிஷ்கனை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்பு இறைச்சி கடைக்காரரின் உதவியுடம் கனிஷ்கனின் உடலை தூண்டு தூண்டாக வெட்டி கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் வீசியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கண்டெடுக்கப்பட்ட இரண்டு கால்கள் மற்றும் வயிற்றுப்பகுதியை டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டி.என்.ஏ. முடிவுகளுக்கு பின்பு முழு விவரமும் தெரிய வரும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆணையர் டி.கே.பிருத்விராஜ் தலைமையிலான தனிப்படை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை கைது செய்தனர்.