Crime : கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலம் தொடுபுழாவைச் சேர்ந்தவர் ஆண்டனி (62). இவர் மனைவி ஜெசி (56). இந்த  தம்பதிக்கு 21 வயதில் ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகள் சில்னா தொடுபுழாவில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர்களது மகன் சிபின் மங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.


இவரது தந்தை ஆண்டனி தொடுபுழாவில் ஒரு பேக்கரி கடை நடத்தி வந்தார். இவர்கள் அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.


இந்நிலையில் இந்த குடும்பத்தாருக்கு பணப் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் கடன் வாங்கினர். கடன் வாங்கி தான் குடும்பத்தை பார்த்துக் கொள்வது போன்று நிலைமை இருந்தது. இதனால் வீட்டு வாடகை கூட கொடுக்காமல் ஆண்டனி சிரமப்பட்டார்.


இதனை அடுத்து, குடும்பத்தார் 3 பேரும் 8 நாட்களுக்கு முன்பு, வீட்டில் விஷம் குடித்துள்ளனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாரு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


அங்கு 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலில் சிகிச்சை பலனின்றி ஜெசி உயிரிழந்தார்.  அடுத்த சில நாட்களில் ஆண்டனி உயிரிழந்தார். தொடர்ந்து சில்னாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரும் உயிரிழந்துள்ளார்.  இதனை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பணப் பிரச்சனையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)




மேலும் படிக்க


Turkey, Syria Earthquake: உலகை உலுக்கிய துருக்கி நிலநடுக்கம்.. இதுவரை மட்டும் 15,000 பேர் உயிரிழப்பு..! கதறும் உறவுகள்!


Cuddalore Incident: பெட்ரோலை ஊற்றி எரிக்கப்பட்ட குடும்பம்; கடலூரில் நடந்தது என்ன..?