கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே காரியாவிளை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த குமார். இவரது மனைவி சஜிலா இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் சுங்கான்கடை பகுதியில் தனியார் மருத்துவமனையில் பார்மசிஸ்ட் வேலை செய்து வந்தார்.

 

கடந்த சனிக்கிழமை பணி முடிந்து வீட்டிற்கு வந்த அவர் நான்கு பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு வீட்டின் சமயலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற குளச்சல் போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு 4-பக்க கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் மினிபஸ் டிரைவர் துரோகம் செய்து விட்டதாகவும், ஐ மிஸ் யூ புருஷா என்றும் குழந்தைகள் குறித்தும் உருக்கமாக எழுதப்பட்டிருந்தது.

 



 

இந்நிலையில் சஜிலாவின் தற்கொலைக்கு மினிபஸ் டிரைவர் கொடுத்த லவ் டார்ச்சர் தான் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியும் போலீசார் அவர்கள் கைது செய்யாத நிலையில், பணி முடிந்து வீடு திரும்பும் சஜிலாவை மினிபஸ் டிரைவர் சிபின் மற்றும் அவரது நண்பர் இருவருமாக திங்கள்நகர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டி விரட்டி தடுத்து நிறுத்தி அத்துமீறி லவ் டார்ச்சர் கொடுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளச்சல் போலீசார் மினிபஸ் டிரைவர் சிபின் மீது தற்கொலைக்கு தூண்டியது பெண்ணை பொது இடத்தில் மானபங்கம் செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

 

மேலும், மினிபஸ் டிரைவர் சிபின் உடன் தொடர்பில் இருந்த மற்றொரு பெண் மூலம் தான் சஜிலாவின் மொபைல் எண்ணை மினிபஸ் டிரைவர் சிபின் வாங்கி தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.