திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள பெருமுட்டம் பகுதியில் பல வருடங்களாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் ‌உழியர்கள் தினந்தோறும் கடையை திறந்து வியாபாரம் செய்து விட்டு இரவு நேரத்தில் வேலை முடிந்த பிறகு கடையை ‌பூட்டி செல்வார்கள். இந்நிலையில் வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் முடிந்த ‌பிறகு இரவு வேலை நேரம் முடிந்ததும் ஊழியர்கள் டாஸ்மாக் கடையை வழக்கம் போல பூட்டி விட்டு சென்றனர்.இதனை அங்கு இருந்து நோட்டமிட்ட மேல்புழுதியூர் பகுதியை சேர்ந்த 3 சிறார்கள் அங்கு இருந்து ஆட்கள் சென்ற உடன் நள்ளிரவில் டாஸ்மாக் கடையை கொள்ளையடிப்பதற்காக கடப்பாரை உள்பட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்தனர். அப்போது நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் தூரத்தில் வருவதை பார்த்ததும் டாஸ்மாக் கடைக்குள் 3 நபர்களும் பதுங்கிக்கொண்டனர்.


 




 


அதனைத்தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுப்பட்ட காவல்துறையினர் ‌டாஸ்மாக் கடை ‌அருகே சென்றுள்ளனர். அப்போது டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட காவல்துறையினர் டாஸ்மாக் கடையின் உள்ளே சென்றனர். அப்போது கடையில் இருந்த ஒரு சிறுவன் வெளியே வேகமாக ஓடிவந்துள்ளார். 17 வயது சிறுவனை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். பின்னர் சிறுவனிடம் விசாரணையில் அவனுடன் 18 வயதுடைய மேலும் 2 நபர்கள் சேர்ந்து டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட சிறுவனை காவல் நிலையத்துக்கு காவல்துறையினர் கொண்டு சென்று விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது கொள்ளை முயற்சியில் அவனுடன் ஈடுபட்ட ஒரு சிறுவன் அங்கு வந்து பிடிபட்ட சிறுவனை விடுவிக்கும்படி கூறி வாயில் வைத்திருந்த பிளேடை எடுத்து கழுத்து, நெஞ்சு பகுதிகளில் கிழித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவனை காவல்துறையினர் தடுத்து சுற்றிவளைத்து பிடித்து செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


 




ஆனால் மருத்துவமனையில் இருந்து மீண்டும் காவல் நிலையத்துக்கு வந்த சிறுவன், சிறுவனை விட்டுவிடும்படி கூறி காவல்துறை யினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து மீண்டும் காவல்துறையினர் சிறுவனை பிடித்து சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக 17 மற்றும் 18 வயதுடைய 2 சிறுவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். பிளேடால் கிழித்துக்கொண்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவன் தப்பிச்செல்வதை தடுக்க அங்கு காவல்துறையினர் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு சிறுவன் தலைமறைவாகியுள்ள சிறுவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.