Crime: கேரள மாநிலத்தில்  விளம்பர மாடல் ஒருவரை, மற்றொரு மாடல் உதவியுடன் 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் மாநிலத்தையே பரபரப்பாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் கேரள மாநில காவல்துறை மற்றொரு விளம்பர மாடல் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். 


கேரள மாநிலத்தின் காசர்கோடைச் சேர்ந்த 19 வயது நிரம்பியவர், கொச்சியில் தங்கி விளம்பர மாடலாக பணியாற்றி வருகிறார்.  சம்பவம் நடந்த தினத்தன்று (18/11/2022) இரவு கொச்சியில் உள்ள ரவிபுரம் எனும் பகுதியில் உள்ள பாருக்கு, தன்னுடன் மாடல் பணியாற்றி வரும் ராஜஸ்தானைச் சேர்ந்தவரான டிம்பிள் லாவா என்பவருடன் மது அருந்த சென்றுள்ளார்.  


அங்கு ஏற்கனவே மது அருந்திக்கொண்டு இருந்த மூன்று பேருடன் சகஜமாக  பேசி பழகியுள்ளனர். பின்னர் அந்த 3 வாலிபவர்கள் அவரை வீட்டில் கொண்டு விடுவதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய அவர்களும் அவர்களுடன் ஜீப்பில் சென்றுள்ளார். வீட்டிற்கு செல்லும் வழியில் செல்லாமல் ஜீப்பை கொச்சி நகரத்திற்கு உள்ளேயே ஓட்டிக் கொண்டு இருந்துள்ளனர்.  அப்போது  அந்த ஜீப்பிலேயே மூன்று வாலிபர்களும் 19 வயது நிரம்பிய விளம்பர மாடலை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பின்னர் அடுத்த நாள் அதிகாலையில் விளம்பர மாடல் தங்கியுள்ள கொச்சி காக்கநாட்டில் உள்ள அவரது வீட்டில் கொண்டு விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.  


அடுத்த நாள் காலை எழுந்து தனது உடலில் இருந்த காயங்களை பார்த்த அவர். தனது தோழிக்கு தகவலை கூறியுள்ளார். இதன் பின்னர் அவரது தோழி எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் காக்கநாடு வந்த காவல் துறையினர் விசாரணை செய்துள்ளனர். மேலும், உடலில் காயங்களுடன் இருந்த விளம்பர மாடலை எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக கேரள மத்திய காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 


காவல்துறையின் விசாரணையில், விளம்பர மாடலை கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது கொடுங்கல்லூர் பகுதியைச் சேர்ந்த விவேக், சுதீப் மற்றும் நிதின் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனை உறுதி செய்த காவல்துறை [பாலியல் குற்றவாளிகள் விவேக், சுதீப் மற்றும் நிதின் என மூவரையும் கைது செய்தனர்.  பாலியல் குற்றவாளிகள் விவேக், சுதீப் மற்றும் நிதின் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விளம்பர மாடலின் தோழியும் விளம்பர மாடலுமான ராஜஸ்தானைச் சேர்ந்த டிம்பிள் லாவா, நடந்த குற்றச் சம்பவத்திற்கு துணையாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே இவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. 


கேரளாவின் கொச்சி நகரில் ஓடும் ஜீப்பில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த கேரள மாநிலத்தை பரபரப்பாக்கியுள்ளது.