crime: ஆற்காட்டில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கொன்ற கணவன் கைது

ஆற்காடு பகுதியில் குடும்ப தகராறு காரணமாக தலையணையால் முகத்தை அமுக்கி மனைவியை கொன்ற கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

Continues below advertisement

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தோப்புகானா பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு வயது (37) இவர் அந்த பகுதியில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பானுமதி வயது (32) இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 11 வருடங்கள் ஆகின்றது. இவர்களுக்கு  மிதுன் ராஜ் வயது (9) இவர் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார்.  கார்த்தி வயது (4) எல்கேஜி படித்து வருகின்றார். இந்நிலையில் சேட்டு மற்றும் பானுமதி ஆகியோர் இடையே குடும்ப பிரச்னை காரணமாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் பானுமதிக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கருப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வந்துள்ளார். சேட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்று வீட்டிற்கு மதிய உணவு உட்கொள்ள சேட்டு வந்துள்ளார். அப்போது  பானுமதி அவருக்கு சாப்பாடு பரிமாறியுள்ளார். அப்போது சேட்டு திடீரென பானுமதியிடம்  தகராறில் ஈடுபட்டுள்ளார்.

Continues below advertisement

 


இதனால் வாய் சண்டையாக இருந்தது கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த சேட்டு பானுமதியின் கழுத்தை இருகைகளாலும் இறுக்கியும் முகத்தில் தலயானை வைத்து அமுக்கி  கொன்றுள்ளார். மேலும் பானுமதி இறந்ததை அறிந்த சேட்டு அங்கிருந்து ஒன்றும் தெரியாதது போல் வேலைக்கு சென்றுள்ளார். வழக்கம் போல் தனது இரு மகன்களையும் பள்ளியிலிருந்து அழைத்து வந்த சேட்டு வீட்டின் வாசலில் இறக்கிவிட்டு உள்ளே வராமல் பணி இருப்பதாக மகன்களிடம் கூறி வேகமாக சென்றுள்ளார்.  அதனைத்தொடர்ந்து பள்ளியில் இருந்து வந்த இரு மகன்கள் பானுமதி கீழே சுயநினைவு இல்லாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினரிடம் ஓடிச்சென்று தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த அவர்கள் பானுமதியை  மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 


அங்கு பானுமதி உடலை பரிசோதித்த மருத்துவர்கள் பானுமதி இறந்து பல மணி நேரம் ஆகிறது என்று தெரிவித்துள்ளனர். அங்கு வந்த பானுமதியின் சகோதரர் பானுமதியின்  இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி ஆற்காடு நகர காவல் காவல்நிலையத்தில் புகார்  அளித்துள்ளார். இந்த புகாரின்  அடிப்படையில் காவல்துறையினர் சேட்டுவை பிடித்து ஆற்காடு நகர காவல்நிலையத்திற்கு அழைத்து  வந்து விசாரணை மேற்கொண்டனர்.  இந்த விசாரணையில் சேட்டு என்னுடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லை அவருக்கு நான் அதிக பணம் செலவு செய்தேன். ஆனால் என்னுடைய மனைவி என்னிடம் அடிக்கடி தகராறு செய்தார் அதனால் தான்  பானுமதியை நான்  கொன்றேன்  என ஒப்புக்கொண்டார் இதனை தொடர்ந்து  விசாரணைக்கு பின்பு வழக்கு பதிவு செய்து சேட்டுவை  சிறையில் அடைத்தனர். குடும்ப தகராறு காரணமாக மனைவியை கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

Continues below advertisement
Sponsored Links by Taboola