Crime : ஹோலி பண்டிகை அன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


ஹோலி பண்டிகை நேற்று கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாட்டப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் பல வித வண்ண பொடிகளை தூவி, மக்கள் அவர்களது அன்பை வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையில் இந்த கொண்டாட்டத்தில் பல சோக சம்பவங்களும் நடந்தன.


4 பேர் உயிரிழப்பு


மத்திய பிரதேச மாநிலம் ரட்டிலம் மாவட்டம் இதுர்துனி கிராமத்தைச் சேர்ந்த 20 வயது புதுமணப்பெண். அதே பகுதியைச் சேர்ந்த நபருடன் 2 வாரங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ஹோலி பண்டிகை கொண்டாடிவிட்டு அங்கிருக்கும் குளத்தில் தனது கணவருடன் குளிக்க சென்றனர். அவர்களுடன் புதுமணப்பெண் தம்பி, தங்கையும் சென்றனர். 


முதலில் அந்த இளம்பெண் குளத்தில் இறங்கி குளித்துள்ளார். அப்போது அவர் ஆழமான இடத்திற்கு சென்றுவிட்டார். ஆழமான இடத்திற்கு சென்ற நிலையில், நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதனை கண்ட அந்த பெண்ணின் தம்பி மற்றும் தங்கை இருவரும் அடுத்தடுத்து குதித்து அக்காவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களுக்கும் நீச்சல் தெரியாததால் உயிருக்கு போராடி உள்ளனர். பின்னர், குளத்தில் குதித்த அந்த பெண்ணின் கணவர் காப்பாற்ற முயன்றுள்ளார். பின்னர், ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.


ஹோலி பண்டிகை அன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்குவதாக தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. மேலும் அமைச்சர் கமலாகர் தனது சொந்த செலவில் ரூ.2 லட்சத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.


மற்றொரு சம்பவம்


மும்பயில் சிவாஜி நகரில் ஹோலி பண்டிகையை அப்பகுதி மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். அவர்கள் ஒருவரைக்கொருவர் வண்ணப்பொடிகளை தூவியும், தண்ணீர் பலூன்களை வீசி ஹோலி பண்டிகையை கொண்டாடி கொண்டு இருந்தனர். அப்போது அங்கிருந்த 41 வயது நபரின் தலையில் தண்ணீர் பலூன் வீசப்பட்டது. அப்போது மயக்கமடைந்த அந்த நபரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  மேலம், இந்த சம்பவம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தம்பதி உயிரிழப்பு


மும்பையில் காட்கோபர் என்ற பகுதியில் வசித்து வருபவர்  தீபக் ஷா (44), டினா ஷா (39) என்ற தம்பதியினர். இவர்கள் நேற்று காலை ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு வீடு திரும்பினர். அப்போது குளிக்க சென்ற இருவரும் மர்ம முறையில் உயிரிழந்துள்ளனர். தம்பதியினரின் குடும்பத்தினர் இவர்களுக்கு தொடர்பு கொள்ள முயன்றனர். அவர்கள் பதிலளிக்காத நிலையில், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தம்பதியினர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.