ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜார்க்கண்ட மாநிலம் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்திருந்தார். அவர் வீட்டில் இருக்கும் உறவினர்களால் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்பு அவர் வேலைக்கு செல்லும் இடத்தில் சக ஊழியர் ஒருவர் அந்த சிறுமியை நீண்ட நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்பு அந்த 9 வயது சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றுள்ளது. சத்தீஸ்கர் ராய்ப்பூருக்கு ரயில் மூலம் அந்த சிறுமியை மர்ம கும்பல் கடத்தி சென்றுள்ளது. ராய்ப்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்த சிறுமியை தங்க வைத்தனர். பின்பு அந்த சிறுமியை எட்டு பேர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் பெற்றோர் அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
2019-ஆம் ஆண்டு 15வயது சிறுமியானது பல மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், ஓடிசா மற்றும் சிங்பூம் மாவட்டத்தில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த சிறுமி மீண்டும் கிழக்கு சிங்பூம் மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார். அந்த பகுதியில் ஒரு காவலரின் வீட்டில் தங்க வைக்கப்பட்ட நிலையில், அங்கு காவலர்கள் 5 பேர் அந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அந்த சிறுமியின் நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் வெளி வரவில்லை.
இதனை அடுத்து, கிழக்கு சிங்பூம் காவல்துறை அதிகாரி பிரபாத் குமார் கூறியதாவது “குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய போலீசார் சத்தீஸ்கருக்கு செல்வது இது முதல் முறையல்ல. குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் ஐந்து பேரை கைது செய்து அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது என தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு அரசியல் கட்சித் தலைவர் உட்பட மீதமுள்ள 5 பேர் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த சிறுமீயானது 15 வயது வரை பல மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர் ஒருவரை கைது செய்ய நீண்டு நாட்களாக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனை அடுத்து தற்போது சத்தீஸ்கரில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.