திண்டிவனம் சுற்றுவட்டார பகுதிகளில் வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக கஞ்சா சாராயம் விற்பனை செய்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் ஏரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக திண்டிவனம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிற்கு ரகசிய தகவல் வந்தது இதனையடுத்து ஒலக்கூர் காவல் ஆய்வாளர்  சசிகுமார், தனிப்படை சப் காவல் ஆய்வாளர்  சண்முகம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்துக்கு சென்றனர். அப்பொழுது போலீசாரை  கண்டவுடன் அங்கு இருந்த நபர்கள் தப்பிக்க முயற்சித்தனர்.அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களை சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா வைத்திருந்ததும், அதனை விற்பனைக்காக  பாக்கெட் போட்டு வைத்திருந்ததும் தெரிய வந்தது.


மேலும், அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணையில்  சாரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் வயது 28, திண்டிவனத்தை சேர்ந்த செல்வகுமார் வயது 22,திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியை சேர்ந்த அன்பழகன் வயது 44 ஆகியோர் என்பது தெரிய வந்தது இவர்கள் வைத்திருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


அதேபோல், திண்டிவனம் அடுத்த தீவனூர்,கொள்ளார் போன்ற பகுதிகளில் சாராயம் மற்றும் கஞ்சா இருசக்கர விற்பனை செய்து  ரெட்டணை பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் வயது 22,ஆசூர் பகுதியை சேர்ந்த ரங்கராஜ் வயது 28 ஆகியோரை கைது செய்து அவர்களை விசாரித்ததில் அவர்கள் இரு சக்கர வாகனத்தில் திண்டிவனம், கொள்ளார்,தீவனூர், வெள்ளிமேடு பேட்டை ஆகிய பகுதிகளில் டூவீலரில் வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக கஞ்சா, சாராயம் ஆகியவை விற்பனை செய்ததும் வீடுகளுக்கே வந்து சப்ளை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்த பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா, சாராயம்,மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


மேலும், விழுப்புரம் மாவட்ட காவல்துறை 3.0 அதிரடி வேட்டையில் இன்று மாவட்டத்தில் 9 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 1 கிலோ 315 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


விழுப்புரம் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் யாரேனும் விற்பனை செய்தால் அவர்களை பற்றிய தகவல்களை நேரடியாக காவல் கண்காணிப்பாளர் திரு ஸ்ரீநாதா IPS., அவர்களின் 94981-11103. எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.




உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?


என்ன செய்ய வேண்டும்?


நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.