Crime : திண்டுக்கல்லில் குழந்தைகள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடு புகுந்து கொள்ளை:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (40). இவர் ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய மனைவி கலையரசி (35). இந்த தம்பதிக்கு தனுஸ்ரீ என்ற 14 வயது மகளும், ராமச்சந்திரன் என்ற 7 வயது மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு சீனிவாசன் வேலை விஷியமாக வெளியே சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை இருந்தனர். அப்போது முகமூடி அணிந்த 5 பேர் வீட்டின் பின்புறம் வழியாக வீட்டின் வளாகத்திற்கு நுழைந்தனர். வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் குழந்தைகள் 2 பேரை பிடித்து கொண்டனர்.
பின்பு, அவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து வீட்டில் இருக்கும் நகை, பணத்தை எடுத்து தர வேண்டும் என கலையரசியை மிரட்டியுள்ளனர். அதற்கு அவர் வீட்டில் எதுவும் இல்லை என்று கூறினார். இதனால் சோதனை செய்த அவர்கள், பீரோவில் இருந்து நகை, பணத்தை எடுத்தனர். அதன்பிறகு கலையரசி அணிந்திருந்த நகையையும் மிரட்டி வாங்கினர். 43 சவரன் நகை மற்றும் ரூ. 18 லட்சத்தை அவர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் வீட்டில் இருந்து செல்போன்களையும் எடுத்து, வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர்.
போலீசார் விசாரணை:
பின்பு, சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சீனிவாசன் பொருட்கள் எல்லாம் சிதறி கண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து கலையரசி அவரது கணவரிடம் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக சீனிவாசன் வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டை சோதனை செய்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் தப்பியோடிய மர்ம நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ரியல் எஸ்டேம் வேலை செய்து வரும் சீனிவாசன், அப்பகுதியில் உள்ள நிலத்தை வாங்க முடிவு செய்தார். இதற்காக கடந்த 19-ந் தேதி வங்கியில் இருந்து ரூ.18 லட்சத்தை எடுத்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அந்த நிலத்தை அவர் வாங்கவில்லை. இதனால் அந்த பணத்தை வங்கியில் செலுத்தாமல் தனது வீட்டிலேயே வைத்திருக்கிறார். எனவே அவருக்கு தெரிந்த நபர்கள் யாரேனும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா? அல்லது வடமாநில கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க