நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ளது கோவில்குளம் கிராமம்.  இந்த பகுதியை நோக்கி ஒரு தரப்பினை சேர்ந்த சுமார் 17 வயது மதிக்கத்தக்க 3 சிறுவர்களும், மற்றொரு தரப்பினை சேர்ந்த சுமார் 2 சிறுவர்களும் தனித்தனி பைக்குகளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது 2 சிறுவர்கள் வந்த பைக் கோவில்குளம் பகுதிக்கு முதலாவதாக சென்றுள்ளது, இதனால் பின்னால் வந்த 3 சிறுவர்கள் அந்த இரண்டு சிறுவர்களை வழிமறித்து அவதூறாக பேசியுள்ளனர். பின்னர் ஒருவரை ஒருவர் தாக்க முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர்களுக்குள் தகராறு முற்றவே, அந்த 3 சிறுவர்களும் வீட்டில் இருந்த வாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து வந்து தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் கீழே கிடந்த செங்கலை கொண்டும் தாக்கியுள்ளனர்.




இதனை அப்பகுதியை சேர்ந்த பிச்சையா என்பவரது மகன் ராஜா என்பவர் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 3 சிறுவர்களும் தடுக்க சென்ற ராஜாவை கையில் இருந்த வாளை வைத்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராஜா அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


மேலும் இச்சம்பவம் குறித்து அம்பாசமுத்திரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த சிறுவர்கள் கையில் வாளுடன் பைக்கில் சென்ற வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர்கள் பைக் ரேசில் ஈடுபட்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பட்டப்பகலில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடத்தில் கையில் வாளுடன் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு அசம்பாவித சம்பவம் நடைபெறா வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண