Crime : சென்னை வியாசர்பாடியில் உள்ள கோயிலில் திருட வந்த நபர் அங்கேயே சொகுசாக உறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை வியாசர்பாடி சர்மா நகரில் 50 ஆண்டுகள் பழமையான வெற்றி விநாயகர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயிலை திறப்பதற்காக இன்று காலை வழக்கம் போல் கோயில் நிர்வாகிகள் வந்தனர். அப்போது, கோயிலில் உள்ள ஒரு அறையில் பீரோவிலிருந்த துணிகள், நகைகள் கலைக்கப்பட்டிருந்தது. பின்பு, அந்த இடத்திலேயே ஒரு நபர் கீழே படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த கோயில் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.


பின்பு, அவரை கையும் களவுமாக பிடித்து அந்த நபரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். அதன்படி, அந்த நபர்  நேற்று இரவு கோயிலுக்குள் புகுந்து பீரோவில் உள்ள நகை, துணிகளை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். பீரோவை  உடைக்க முடியாததால் அருகில் இருந்த மற்றொரு பீரோவை உடைக்க முயற்சி செய்தார்.  அந்த பீரோவில் துணிகள் மட்டும் இருந்ததால் அனைத்தையும் கலைத்து நகைகளை தேடி உள்ளார்.


பின்னர், மற்றொரு பீரோவை உடைக்க முயற்சி செய்தார். நீண்ட நேரமாகியும் அந்த பீரோவை உடைக்க முயற்சி செய்தும் முடியாததால் களைப்பில் அவர் அங்கேயே தூங்கியது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து, கோயில் நிர்வாகிகள் இந்த சம்பவம் குறித்து எம்.கே.பி.நகர் காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர். 


இதுகுறித்து அறிந்த எம்.கே.பி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்பு, கோயிலில் திருட முயன்ற நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதனால் அவரை போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். வடிவேலு பாணியில் கோயிலில் திருடச் சென்ற நபர் அங்கேயே உறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மற்றொரு சம்பவம்


மதுரை அவனியாபுரத்திற்கு செல்லும் சாலை பராசக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல். இவருக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், மனைவி மற்றும் மகள் உள்ளிட்டோர் வெளியூர் சென்றிருந்த நிலையில், ரத்தினவேல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அதோடு வேலைக்கு சென்ற ரத்தினவேல் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அறையில்  ஒரு நபர் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தார்.


இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரத்தினவேல் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.  மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் என்பது விசாரணையில் தெரிந்தது. 




மேலும் படிக்க


Delhi: OYO மூலம் புக் செய்த ஓட்டல்: பணத்தை திருப்பி கேட்ட நபர்களுக்கு துப்பாக்கி காட்டி மிரட்டல்! - நடந்தது என்ன?