சென்னை அடுத்துள்ள குன்றத்தூரில் காவல்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் ரத்தக்கறையுடன் ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல் துறையினர் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது தனது பெயர் ராஜா (38), என்றும் தான் தன்னுடன் நட்பில் இருந்த பெண் ஒருவரை கொலை செய்து விட்டு வந்ததாக தெரிவித்தார்.




இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது உடைகள் எல்லாம் கிழிந்த நிலையில் அரை நிர்வாண நிலையில் கண்ணம்மாள் (55), என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குன்றத்தூர் அடுத்த ஜெகநாதபுரம், சேக்கிழார் நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மா(50), இங்கு உள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்து கொண்டு ஹாலோ பிளாக் கல் அறுக்கும் வேலை செய்து வந்தார். இருவருக்கும் கடந்த சில வருடங்களாக தொடர்பு இருந்து வந்த நிலையில், நேற்றிரவு போதையில் வந்த ராஜா கண்ணம்மாவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அவரது மகள்கள் வந்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.




அதன் பிறகு மீண்டும் வந்த ராஜா கண்ணம்மாவை கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்றது தெரியவந்தது. மேலும் உடைகள் எல்லாம் கிழிந்து அரை நிர்வாண நிலையில் இருந்ததால் போதையில் உடலுறவு கொள்ளும் போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் குன்றத்தூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.  கொலை செய்த ராஜா திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் தாண்டிய உறவால் பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, கண்ணம்மாள் மற்றும் ராஜா ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். ராஜாவிற்கு குடி பழக்கம் இருப்பது கண்ணம்மாவுக்கு  பிடிக்காமல் இருந்து வந்துள்ளது.  குடிப்பழக்கத்தை நிறுத்தச் சொல்லி கண்ணம்மாள் வற்புறுத்தியும் ராஜா கேட்காமல் இருந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று ராஜா மது போதையில் இருந்ததால் கணவருக்கும் அவருக்கும் வாக்குவாதம் நடைபெற்று உள்ளது இதில் அவரைக்  குத்தி கொலை செய்தல் இருக்கலாம் என தெரிவித்தனர்.