சென்னை அருகே நண்பரை கல்லால் அடித்து தாக்கிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கொளத்தூர் செல்லியம்மன் கோவில் 3-வது தெருவில் வசித்து வருபவர் பரத்ராஜ். இவருடைய நண்பர்கள் கொளத்தூர் ஜி.கே.எம்.காலனியைச் சேர்ந்த சஞ்சய் மற்றும் ஜீவா. சஞ்சய், ஜீவா இருவரும் பரத்ராஜ் உடன் அவர்கள் பகுதியில் சந்தித்து டீ குடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவும் நண்பர்கள் சந்தித்துள்ளனர்.
மண்டையை உடைத்த நண்பர்கள்:
பரத்வாஜூடன் சிவசக்தி நகர் அருகே உள்ள ஒரு மைதானத்தில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஏதோ பேசிக் கொண்டிருக்கையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பொறுமை இழந்து ஆத்திரமடைந்த அடைந்த சஞ்சய் மற்றும் ஜீவாவும அங்கிருந்த கல்லை எடுத்து பரத்வாஜ் தலையில் அடித்து தாக்கியுள்ளனர். இவர்கள் சண்டைபோடும் சத்தம் கேட்ட அருகில் இருந்தவர்கள் பரத்வாஜ் நண்பர்களிடமிருந்து மீட்டு பலத்த காயங்களுடன் இருந்தவரை மீட்டு சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ராஜமங்கலம் போலீசார் சஞ்சய், ஜீவா இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.
*****
மனைவியை பாட்டிலால் தாக்கிய கணவர்
சென்னை அருகே ஓட்டேரியில் குடி போதையில் மனைவியை பாட்டில் தாக்கிய கணவர் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
ஓட்டேரி,எஸ்.எஸ்.புரம், 'ஏ' பிளாக்கை சேர்ந்தவர் ரெஜினா. இவர் வீட்டு வேலை செய்பவர். இவருடைய கணவர் நாசருடன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து பிரிந்து தனியாக வசித்து வருகிறார். பின்னர், மோசஸ், என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரிஸ்வான் என்ற குழந்தை உள்ளது.
மதுபாட்டிலால் குத்திய கணவன்:
மோசஸ் மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால தன் மனைவியின் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டார். மனைவியை அடிக்கடி அவரை அடிப்பார் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை மது அருந்திவிட்டு வீட்டு வந்து மனைவியிடன் தகராறு செய்துள்ளார்.
அதோடு, அவரை அடித்துள்ளார். மதுபாட்டிலை உடைத்து, அவரை குத்தியுள்ளார். அவரது வீட்டில் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டியிருக்கின்றனர். பின்னர், படுகாயமடைந்த ஜெரினாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.