Crime : காதலியை விமான பணிப்பெண் வேலைக்கு போவதை தடுக்க 25 முறை பீர் பாட்டிலால் குத்தி சிதைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சென்னை: தனக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதால் இளைஞர் ஒருவர் தன் காதலியான விமான பணிப் பெண், வேலைக்கு போவதை தடுக்க 25 முறை பீர் பாட்டிலால், அவரது முகத்தில் குத்தி சிதைத்தார். அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் முகத்தில் 25 தையல்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.


ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ள கேரள மாநிலம் கர்த்தனக்கல் பகுதியைச் சேர்ந்தவர் சோனு ஜோசப் (20). இவர், சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல ரெஸ்டாரன்ட்டில் 8 மாதங்களுக்கு முன்புவேலைக்கு சேர்ந்தார். இவர், அதே பகுதியில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தார். அவர் 6 மாதங்களாக ஒரு நபரை காதலித்து வந்திருந்தார். இந்நிலையில், சோனு ஜோசப் கடந்த 14ம் தேதி இரவு பணி முடிந்து, தனது விடுதிக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.


அப்போது 25 வயதான இளைஞர் ஒருவர் சோனு ஜோசப்பை வழிமறித்து, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் சோனு ஜோசப் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் திடீரென கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து நடந்து சென்ற சோனு ஜோசப்பின் பின் பக்க தலையில் ஓங்கி அடித்தார். பின்பு ரோட்டில் மயங்கி விழுந்தார்.  அப்போது ஆத்திரம் தீராத அந்த இளைஞர், உடைந்த பீர் பாட்டிலால் அந்த பெண்ணின் முகத்தில் சராமாரியாக குத்தி உள்ளார். மேலும், வயிறு. கழுத்து உள்ளிட்ட பகுதிகளிலும் குத்தி உள்ளதாக கூறப்படுகிறது.


இதை கவனித்த பொதுமக்கள் சோனு ஜோசப்பிற்கு உதவி கேட்டு அலறினர். பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடியதை கவனித்த அந்த வாலிபர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். முகம் 5 மீ சிதைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சோனு ஜோசப்பை, பொதுமக்கள் மீட்டு ஆட்டோ மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சோனு ஜோசப்பிற்கு முகத்தில் 25 தையல்கள் போடப்பட்டும். உடல் முழுவதும் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


சம்பவம் குறித்து மருத்துவமனை தகவலின்படி, கீழ்ப்பாக்கம் போலீசார் கொலை முயற்சி, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அந்த இளைஞரைபிடிக்க கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சம்பவம் நடந்த மெட்ரோ ரயில் நிலைய கார் பார்க்கிங் முன்பு பொருத்தப் பட்டுள்ள சிசிடிவி பதிவுகள் மற்றும் வாலிபரின் செல்போன் சிக்னல் உதவியுடன் விசா ரணை நடத்தினர்.


அதில், சென்னை வேப்பேரியைச் சேர்ந்தவர் நவீன் (25) என்பது விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து, தனிப்படை போலீசார் நவீனை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. ”விமானப் பணிப்பெண் வேலைக்கு அந்த பெண் படித்து வந்திருந்தார். அந்த வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறினேன். அதை அவர் கேட்கவில்லை. பின்பு தன்னுடன் பேசுவதையும் நிறுத்தி விட்டதால் ஆத்திரமடைந்து, அவரது முகத்தில் பீர் பாட்டிலால் குத்தினேன்” என வாக்குமூலம் அளித்தார்.