Crime: குடும்பத்திற்காக நேரம் ஒதுக்காததால் மனைவியை, கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மனைவியை கொன்ற கணவர்:


பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோபா குமாரி. இவர் அதே பகுதியை சேர்ந்த கஜேந்திர குமார் என்பவரை காதலித்து 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சோபா குமாரிக்கு நீண்ட ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் இருந்துள்ளது. பல ஆண்டுகளாக வேலை கிடைக்காத சோபா குமாரிக்கு, தற்போது தான் காவல்துறையில் வேலை கிடைத்திருக்கிறது. இதனால், சோபா குமாரிக்கு வீட்டில் நேரம் ஒதுக்க முடியவில்லை. குழந்தையையும் பார்க்க முடியவில்லை.


இதனால் அவரது கணவர் கஜேந்திர குமார் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக தெரிகிறது. பிறகு, கஜேந்திர குமார் தன் மனைவி அவரது பணிக்கே அதிக நேரம் செலவழிப்பதாகவும், இதனால் அந்த பணியில் இருந்து விலக வேண்டும் என்றும் விரும்பி உள்ளார். வேலையை விட வேண்டும் என்று மனைவியிடம் பலமுறை கூறியிருக்கிறார். ஆனால் மனைவி சோபா குமார் வேலையில் விலகாமல் இருந்ததால், அவரது கணவர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில், தன் தந்தைக்கு மருந்து வாங்கி வர டெல்லிக்கு சென்றிருந்தார் கஜேந்திர குமார். டெல்லி சென்று திரும்பிபோது, மனைவி சோபா குமாரியை பாட்னா ஜங்ஷன் அருகே உள்ள ஹோட்டலுக்கு அழைத்திருக்கிறார் கஜேந்திர குமார். இதனால், ஹோட்டலுக்கு வந்திருந்தார் மனைவி சோபா குமாரி.


கைது:


அப்போது, வேலையை விட வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனால், இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் நீடித்த நிலையில், கஜேந்திர குமார் தான் தயாராக வைத்திருந்த துப்பாக்கியால் சோபா குமாரியை சுட்டுக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 


இதனை அறிந்த போலீசார் ஹோட்டலுக்கு சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த சோபா குமாரியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கஜேந்திர குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹோட்டலில் மனைவியைக் கொலை செய்த பின்னர், சுமார் 36 மணி நேரம் கழித்து கஜேந்திர குமார் போலீசாரிடம் சிக்கி உள்ளார். தன் மனைவி வேலை கிடைத்த பிறகு  குடும்பத்திற்கு நேரம் ஒதுக்காததால்  மன உளைச்சலுக்கு ஆளாகி, மனைவியைக் கொலை செய்ததாக கஜேந்திர குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.




மேலும் படிக்க


TR Balu Statement: "ஆளுநர் மாளிகையே... அடக்கிடு வாயை..." - ஆளுநரை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்ட டி.ஆர் பாலு..