Crime: துப்பாக்கியால் மானை சுட்டு வேட்டையாடிய 7 பேர் கைது..! நெல்லையில் பரபரப்பு..!

நெல்லை வனச்சரகர் சரவணக்குமார் தலைமையிலான வனத்துறையினர் பாப்பாக்குடி காவல் நிலையம் வந்து வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கிகள், தோட்டாக்கள், இறந்த மான், கத்திகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Continues below advertisement

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் இன்று அதிகாலையில் எஸ்.ஐ ஆபிரகாம், காவல‌ர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர்.  தொடர்ந்து நடத்திய சோதனையில் காரின் பின்புறம் இறந்த நிலையில் மான், இரண்டு துப்பாக்கிகள், தோட்டாக்கள், கத்தி,  உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. 

Continues below advertisement


தொடர்ந்து போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பாப்பாக்குடி அருகேயுள்ள பனையங்குறிச்சி என்ற  பகுதியில் துப்பாக்கியால் மானை வேட்டையாடியது தெரிய வந்தது. பின் நெல்லை வனச்சரகர் சரவணக்குமார் தலைமையிலான வனத்துறையினர் பாப்பாக்குடி காவல் நிலையம் வந்து வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கிகள், தோட்டாக்கள், இறந்த மான், கத்திகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் மானை வேட்டையாடிய கல்லூரை சேர்ந்த ராமையா, சேரன்மகாதேவியை சேர்ந்த குமார், ரமேஷ், ஊத்துமலை சேர்ந்த கிருஷ்ணா, மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த யோஸ்வா ராஜ்,  வாடிப்பட்டியை சேர்ந்த போவாஸ், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் ஆகிய 7 பேர் கொண்ட கும்பலையும் வனத்துறையினர் கைது செய்து அழைத்து செய்தனர். மேலும் சுட்டு கொல்லப்பட்ட மான் சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் மான் என்றும் வனத்துறையினர் தரப்பில் தெரிவித்தனர்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola