தென்காசி மாவட்டத்தில் அதிக அளவில் கஞ்சா மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தில் இருப்பதாக காவல்துறையினருக்கு தொடர் புகார் மற்றும் ரகசிய தகவல்கள் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர்  கிருஷ்ணராஜ் மேற்பார்வையில்  தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக இருவர் நின்றுக் கொண்டிருந்ததை கவனித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.


விசாரணையில் அவர்கள் தென்காசி உடையார் தெருவை சேர்ந்த மணிச்செல்வன் வயது 28, மற்றும் செங்கோட்டை பெரிய பிள்ளை வலசை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த  மணிகண்டன் வயது 24 , என்பது தெரிய வந்தது. அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் சுமார் 1,20,000 மதிப்பிலான சுமார் 4 கிலோ கஞ்சாவும், சுமார் 2 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுக்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 




கைது செய்யப்பட்ட பிரகலாதன் &மாரிமுத்து


இதே போல் செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சப் இன்ஸ்பெக்டர் இசக்கி தலைமையிலான போலீசார் பெரியபிள்ளை வலசை சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது சந்தேகப்படும் படியாக இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்த முயன்ற போது இருவரும் தப்பியோட முயற்சித்துள்ளனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் செங்கோட்டை அருகே தெற்கு மேடு பகுதியை சேர்ந்தவர்  பிரகலாதன் (31), மற்றும் விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (35) என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து இருவரின் கையில் இருந்த பையை சோதனை செய்த போது அதில் கட்டு கட்டாக 500 ரூபாய் கள்ள  நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது. சுமார் 2 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட இருந்த இருவரையும் கைது செய்தனர். கட்டுக் கட்டாக 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் சுற்றி திரிந்த 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண