வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோக்கள்.. கல்லூரி மாணவனுக்கு வலை வீசிய பெண் பேராசிரியர்கள்.. மாணவன் தற்கொலை..
சமீப காலமாக பாலியல் சீண்டல் என்பது பெண்களுக்கு மட்டும் இல்லாமல், ஆண்களுக்கும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் குறிவைத்து, இது போன்ற பாலியல் சீண்டல் சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்திய வருகிறது. ஆண் மற்றும் பெண் பேராசிரியர்களே இது போன்று மாணவர்களை பாலியல் சீண்டலில் ஈடுபடுவது பெற்றோர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது
கல்லூரி மாணவர் சாய் தேஜா
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம், எம்.வி.பி. காலணியை சேர்ந்தவர் சூரியபாபு. சூரியபாபு ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சாய் தேஜா (22) விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரி இறுதி ஆண்டு படித்து வருகிறார். வகுப்பிலேயே படிப்பின் சிறந்த மாணவர்களின் ஒருவராக சாய் தேஜா இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோக்கள்
இந்தநிலையில் கல்லூரி பெண் பேராசிரியர்கள் இருவர் சாய் தேஜாவிடம் தவறான முறையில் நடக்க முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது. சாய் தங்களது ஆசைக்கு இணங்கும் வேண்டும் என பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இரண்டு பெண் பேராசிரியர்களும் சாய் whatsapp எண்ணுக்கு தொடர்ந்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்களை அனுப்பி வைத்து வந்துள்ளனர்.
தொடர்ந்து சாய்க்கு ஆபாச வீடியோ மற்றும் புகைப்படம் அனுப்பி வந்தாலும், இருவருடைய ஆசைக்கு இணங்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் பேராசிரியர்கள் இருவரும், உன்னை தேர்வில் தோல்வி அடைய வைக்கிறேன் என மிரட்டி பார்த்துள்ளனர். ஆசைக்கு இணங்காததால் செய்முறை தேர்வில் குறைந்த மதிப்பெண்களை வழங்கியும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
மாணவரை மிரட்டிய பேராசிரியர்கள்
தொடர்ந்து பெண் பேராசிரியர்கள் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதால், சாய் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். தனது செய்முறை தேர்வில் மார்க் குறைந்ததால், உடனடியாக தனது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்து சாய் வேதனையடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை சாய் தேஜாவின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் கல்லூரிக்கு சென்று, இது குறித்து புகார் அளித்துள்ளனர்.
பெற்றோர் புகார் அளிக்க கல்லூரிக்கு சென்ற போது சாய் வீட்டில் இருந்து வந்துள்ளார். அப்போது பெண் பேராசிரியர்கள் இருவரும் செல்போன் மூலம் சாய்க்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பயந்து போன சாய் தேஜா, தனது செல்போனில் இது குறித்து ஆடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கல்லூரியில் புகார் அளித்த பிறகு வீட்டிற்கு சென்ற பெற்றோர் சாய் தூக்கில் தொங்கிய நிலையில் பார்த்து கதறி அழுந்துள்ளனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து கல்லூரி மாணவர் சங்கத்தினர் பேராசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்போனை கைப்பற்றி போலீஸ் விசாரணை
சாய் தேஜாவின் செல்போன் உங்களை போலீசார் கை பற்றி வாட்ஸ் அப் மூலம் நடந்த, உரையாடல்களை ஆய்வு செய்து வருகின்றனர். காவல்துறையினர் செய்த ஆய்வில் இரண்டு பெண் பேராசிரியர்கள் ஆபாச வீடியோ மற்றும் ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததும், சில நாட்களாக இந்த தொல்லை அதிகரித்து வந்ததால் இந்த தற்கொலை சம்பவம் நடைபெற்றதும் தெரிய வந்தது.