கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைப்பெற்றுவந்துள்ளது . இதில் தொடர்புடையவர்களை பிடிக்க சூளகிரி பகுதியில் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டார். அதன்பேரில், ஓசூர் உதவி காவல்  கண்காணிப்பாளர் அரவிந்த் மேற்பார்வையில், ஆய்வாளர் மனோகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.


 




 


இந்தநிலையில் கடந்த 15-ம் தேதி தனிப்படை காவல்துறையினர், சூளகிரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற 2 இருசக்கர வாகனத்தில் வந்த 5 நபர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து ஐந்து தபர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தனர்.  சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர் அந்த  விசாரணையில் பர்கூர் அருகே குண்டியால் நத்தம் கிராமத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி வயது (26), திருப்பத்தூர் மாவட்டம் சின்ன வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த அரசன் வயது (24), சந்தோஷ் வயது (19) மற்றும் திருவேங்கடம் வயது (31), வேலூர் மாவட்டம் பனந்தோப்பை சேர்ந்த சதீஷ்குமார் வயது (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் ஓசூர், சூளகிரி, குருபரப்பள்ளி, பர்கூர் உள்ளிட்ட பல  இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடி வேறு மாவட்டங்களில் விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 25 லட்சம் மதிப்பிலான 41 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் மீட்டனர். 


 




 


 


அதனைத்தொடர்ந்து தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் . இதனைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி பார்வையிட்டார். தொடர்ந்து அவர் தனிப்படை காவல்துறையினரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை தேசிய நெடுஞ்சாலைகளிலும், மெயின் ரோடுகளிலும் பாதுகாப்பற்ற இடங்களில்   நிறுத்தக்கூடாது.மேலும் இரு சக்கர வாகனங்களை வாங்கும்போது, ஆவணங்கள் சரியாகஉள்ளதா என்று சரிபார்த்து வாங்கவேண்டும். திருட்டு வாகனங்களை பணம் கொடுத்து வாங்கி ஏமாறக்கூடாது. குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று இவ்வாறு தெரிவித்தார்.


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


 


 


 


 


 


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


 


 


 


 


 


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


 


 


 


 


 


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


 


 


 


 


 


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


 


 


 


 


 


 


யூடிபில் வீடியோக்களை காண