பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகி பார்த்தசாரதி சித்தூரில் கைது செய்யப்பட்டார். அவரை புளியந்தோப்பு துணை ஆணையர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
தனக்கும், தனது மகளுக்கும் பார்த்தசாரதி பாலியல் தொல்லை கொடுத்ததாக பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் கூறினார். இதுதொடர்பாக போலீசார் பார்த்தசாரதி தேடி வந்த நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூரில் அவர் கைது செய்யப்பட்டார்.
'நான் அப்படிச் சொல்லவில்லை’ ராகவன் வீடியோ விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மறுப்பு!
சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர், பாஜக பெரம்பூர் கிழக்குப் பகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், தனக்கும், தனது 15 வயது மகளுக்கும் பார்த்தசாரதி பாலியல் தொல்லை கொடுத்ததாக பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 12ஆம் தேதி சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் கூறினார். அந்தப் புகாரில், எருக்கஞ்சேரி பகுதியில் கணவர் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வருகிறேன். தனது வீட்டுக்கு எதிரே வசிக்கும் பாஜகவை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் ஏற்கெனவே தன்னிடம் மற்றும் மகள்களிடமும் பிரச்னை செய்து கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக கடந்த 26-3-2018 அன்று கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். இந்த புகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் வந்தார். இதன் பின்னர், தனக்கு, தனது குடும்பத்தாருக்கும் தொந்தரவுகளும், மிரட்டல்களும் கொடுத்து வந்தார். வீட்டு வாசலில் இருக்குபோது தகாத வார்த்தைகளால் திட்டியும், வாசலில் தானும், தனது மகள்களும் கோலம் போடும் போதெல்லாம், பார்த்தசாரதி தனது வீட்டு ஜன்னலில் இருந்து புகைப்படம் எடுத்து எல்லாம் டார்ச்சர் செய்தார். இதுதொடர்பாக தனது கணவர் அவரிடம் கேட்டால், மிரட்டல் விடுத்து வந்தார். எனவே, அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண்மணி கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு கொடுங்கையூர் போலீசாருக்கு ஆணையர் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, பார்த்தசாரதி மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாச செயலை புரிதல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம், குந்தகம் விளைவிக்கும் வகையி நடத்தல், பாலியல் அத்துமீறல், பெண் வன்கொடுமை, குற்றம் கருதி மிரட்டல், பெண்ணை அவமானப்படுத்தும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த போலீசார் தேடி வந்த நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூரில் அவர் கைது செய்யப்பட்டார். அவரை புளியந்தோப்பு துணை ஆணையர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பார்த்தசாரதி சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்கின்றனர்.