சென்னை திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் வயது 35 இவர் தனியார் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இவர் அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி இரவு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே கார்த்திக் , தீபக் (எ) ரஞ்சித் குமார் , அய்யனார் ,சின்னசாமி , மற்றும் 17 வயது சிறுவன் என 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பெரம்பூர் கென்னடி சதுக்கம் பகுதியை சேர்ந்த இலா (எ) லிங்கராஜ் (20) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் (எ) ஜெமினியாஸ் (22) என்ற நபரையும் திரு.வி.க நகர் போலீசார் தேடி வந்தனர்.

 



 

கொலை நடந்து ஒரு மாதம் ஆகிய நிலையில் தொடர்ந்து இவர்கள் தலைமறைவாக இருந்தனர். இந்நிலையில் இவர்களை பிடிக்க  தனிப்படை அமைக்கப்பட்டது இந்நிலையில் திரு.வி.க நகர் இன்ஸ்பெக்டர்  தலைமையிலான போலீசார் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவில் அருகே தங்கியிருந்த இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து மணிகண்டனை கொலை செய்ய உடந்தையாக இருந்ததற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 



 

கஞ்சா போதையில் இளைஞரைத் தாக்கி பணம் பறித்த 3 பேர் கைது

 

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகர் 16 வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (34). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து வியாசர்பாடி முல்லை நகர் சந்திப்பு வழியாக சென்று கொண்டிருக்கும் போது மூன்று இளைஞர்கள் அவரை மடக்கி தகராறில் ஈடுபட்டனர். உடனே இது குறித்து சுந்தர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க தனது செல் போனை எடுத்த போது மூன்று இளைஞர்களும் கத்தியைக் காட்டி மிரட்டி சுந்தரிடம் இருந்து செல் போன் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை  பறித்து சென்றனர். இதுகுறித்து சுந்தர் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

 



 

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த எம்.கே.பி நகர்  போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் ஏற்கனவே பல்வேறு இடங்களில் குற்றச் செயலில் ஈடுபட்ட சிலர் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து வியாசர்பாடி முல்லை நகர் சுடுகாடு அருகே பதுங்கியிருந்த வியாசர்பாடி முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த பரத் வயது 20 மற்றும் அதே பகுதியை சேர்ந்த தீபன் ராஜ் 20, தயாள் ராஜ் 20 ஆகிய மூவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஒரு கத்தி மற்றும் சுந்தரிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்போன் உள்ளிட்ட பொருட் கள் பறிமுதல் செய்யப் பட்டன. கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த எம்.கே.பி நகர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.