பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அப்படி நடைபெறும் பாலியல் வன்முறை குற்றங்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு சில நேரங்களில் குற்றவாளிகள் சிலர் ஜாமீனில் வெளியே வந்துவிடுகின்றனர். அந்தவகையில் தற்போது 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பாலியல் சம்பவத்திற்கு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 


கடந்த 2018ஆம் ஆண்டு  பூந்தமல்லி அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற ஆசிரியர் பரசுராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 103 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியர் பரசுராமன்  15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ₹45,000 அபராதமும் விதித்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண