சென்னை குரோம்பேட்டை அடுத்த ஜமீன் இராயபேட்டையில் வசிப்பவர் ஆறுமுகம் ( வயது 51). இவர் குரோம்பேட்டை பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (வயது 47). இவர் கணவர் செய்யும் வியாபாரத்திற்கு உதவியாக இருந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும், ஜமீன் ராயப்பேட்டை பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் 1 முதல் குறுக்கு தெருவில், சமீபத்தில் குடியேறி வசித்து வருகின்றனர்.
இத்தம்பதிக்கு ராஜேஷ் என்ற மகனும் வசந்தி, அமுலு என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வந்துள்ளனர். ஆறுமுகம் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகள் வசந்தி, சம்பத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இன்ஸ்டாகிராம் பழக்கம்
இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக தனது 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசந்தி வசித்து வந்திருக்கிறார். இதனிடையே, வசந்திக்கு சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மோசஸ் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கம் மூலம் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இதுவருக்கிடையே, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. அவ்வப்போது இருவரும் சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளனர்.
மோசஸ் திட்டமிட்டு..
சமீபத்தில் குடியேறிய வீட்டிற்கு வந்த மோசஸ் வசந்தியை பார்த்து, சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 30ம் தேதி தனது 2 குழந்தைகளுடன், மாங்காட்டில் உள்ள சகோதரி அமுலு வீட்டுக்கு வசந்தி சென்றுவிட்டார். அன்றிரவு வசந்தியை தொடர்பு கொண்ட கள்ளக்காதலன் மோசஸ், நீ வீட்டுக்கு வராவிட்டால், உனது பெற்றோரை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். ஆனால் வசந்தி வீட்டுக்கு வராததால், நள்ளிரவு வீட்டிற்கு வந்த மோசஸ் திட்டமிட்டு தனது நண்பருடன் சேர்ந்து தம்பதி இருவரையும் கொலை செய்துள்ளார்.
இரட்டை கொலை..
தொடர்ந்து வசந்தி தனது பெற்றோர் செல்போன்களுக்கு தொடர்பு கொண்ட பொழுது , தொலைபேசி எடுக்காமலும் இருந்து வந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த பெரிய மகள் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் தனது தாய் தந்தை வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். கதவு திறக்காததால் சந்தேகமடைந்து கதவு உடைத்து பார்த்தபோது வீட்டினுள் தாய் மஞ்சுளா, தந்தை ஆறுமுகம் கழுத்தறுபட்டு இறந்த நிலையில் உள்ளது தெரியவந்தது. இது குறித்து சிட்லப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கபட்டு விரைந்து வந்த காவல்துறையினர், பிரேதத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்