Crime :  மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


ரெய்டு


சென்னை தேனாம்பேட்டை அண்ணாசாலையில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று உள்ளது. அங்கு மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் அந்த அடுக்குமாடி கட்டடத்தின் 6வது மாடியில் உள்ள மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை செய்தனர்.


சிக்கிய 2 பேர்


அதில், இளம்பெண்களை வைத்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது. இதுமட்டுமின்றி மசாஜ் சென்டருக்கு வரும் வாடிக்கையாளர்களை அங்குள்ள தனியார் கிளப் ஒன்றிற்கு அனுப்பி பாலியல் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, பாலியல் தொழில் நடத்தி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீப் ராய் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வினோத்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 


இதனை தொடர்ந்து மசாஜ் சென்டரில் இருந்த வெளிமாநில பெண்கள் 5 பேரை போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் விசாரணை நடத்தியபோது சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்.


விசாரணையில் அம்பலம்


அந்த வகையில், அண்ணாசாலையில் உள்ள இந்த அடுக்கமாடி கட்டடத்தில் தனியார் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கிளப்பின் பொது மேலான் இயக்குநர் இளையராஜா மற்றும் பொது மேலாளர் ஜோசம் ஆகியோர் பாலியல் தொழிலுக்காக கிளப்பிலேயே தனியாக டெலிகாலிங் நடத்தி வந்தனர்.


அங்கு டெலிகாலர் என்ற பெயரில் இளம் பெண்களை வேலைக்கு அமர்த்தினர். அவர்கள் மூலம் வாட்ஸ் ஆப் மற்றும் பல்வேறு மசாஜ் சென்டர்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்களை பெற்று அவர்களிடம் இளம் பெண்கள் இருப்பதாக கூறி, ஓட்டல்களில் அறை புக் செய்து பெரிய அளவில் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.


இதுமட்டுமின்றி, மசாஜ் சென்டர் என்ற பாலியல் தொழில் நடத்தி வந்த இரண்டு பேருக்கு, கிளப் மேலாளர் ஜோசப், நிர்வாக இயக்குநர் இளையராஜா ஆகியோர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்தாக கூறப்படுகிறது. பணம் கொடுத்து கிளப்பிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொழில் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.


மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தனியார் கிளம் நிர்வாகிகள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.  மசாஜ் சென்டரில் இருந்து மீட்கப்பட்ட பெண்கள் 5 பேரை நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.




Crime: உடல் உபாதைகளை தாங்க முடியாமல் தனக்குத்தானே சிதை மூட்டிக் கொண்ட முதியவர்! நடந்தது என்ன?


Crime: சம்பள உயர்வுக்கு இடையூறு... சப்-இன்ஸ்பெக்டரை அடித்துக் கொன்ற சக போலீஸ்காரர்.. பொதுமக்கள் அதிர்ச்சி