மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா இன்று காலை டெல்லியில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரை சென்னை அழைத்து வந்து விசாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லி அருகே இருக்க கூடிய காசியாபாத்தில் இன்று காலை ஒரு பெண் பக்தையின் வீட்டில் சிவசங்கர் பாபாவை காவல்துறை உயர் அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அதன் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை ஆஜர்படுத்தியுள்ள காவல்துறையினர் இவர் மீதான குற்றம், இவரை கைதுசெய்த நோக்கம் அனைத்தையும் தெரிவித்து, சிவசங்கர் பாபாவை தமிழ்நாடு அழைத்து சென்று விசாரணை நடத்த அனுமதி கேட்டுள்ளனர். இந்நிலையில் அணைத்து விதமான தகவல்களும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பின்பு, சென்னை அழைத்துச்செல்ல நீதிபதி அனுமதி வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சிவசங்கர் பாபாவை விமானம் அல்லது ரயில் மூலம் சென்னை அழைத்து வர காவல்துறை ஏற்பாடு மேற்கொண்டு வருகின்றனர்.



முன்னதாக தனது பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த சிவசங்கர் பாபா, நெஞ்சுவலி எனக்கூறி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தனியார் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு  சிபிசிஐடி தனிப்படை போலீசார் விசாரணைக்காக டேராடூன் சென்றபோது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.


தப்பியோடிய அவர் வேறு ஆசிரமங்களில் பதுங்கி உள்ளாரா என சிபிசிஐடி தேடுதல் வேட்டை நடத்தி வந்தது. . மேலும், சிவசங்கர் பாபா நேபாளத்துக்கு தப்பிச்செல்லாமல் தடுக்க உத்தரகாண்ட், டெல்லியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. சிவசங்கர் இல்லாமல், திரும்ப போவதில்லை என்பதில் உறுதியாக இருந்த சிபிசிஐடி போலீசார், டேராடூனில் டேரா போட்டனர். அப்பாடா... போலீஸை ஏமாத்திட்டோம் என டெல்லி காசியாபாத்தில் ஷவர் பாத் எடுத்துக் கொண்டிருந்த சிவசங்கர் பாபா பற்றி, சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 


உடனே டில்லி விரைந்த தனிப்படை, அங்குள்ள போலீஸ் உதவியுடன் காசியாபாத்தில் ஈஸியாய் சிவசங்கரை தூக்கினர். போலீசார் தன்னை நெருங்குவார்கள் என சற்றும் நினைக்காத பாபா, பேபே என விழித்தார். புகாரை கூறி, அவரை கைது செய்வதாக போலீசார் கூற, தன் வசம் வேறு பாயிண்ட் எதுவும் இல்லாத நிலையில், விரல் பிடித்து நடக்கும் குழந்தை போல அவர்கள் பின் நடந்தார் சிவசங்கர் பாபா. அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்திய பின், தமிழ்நாடு அழைத்து வந்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் சென்னை வந்து சேர்வார் சிவசங்கர் பாபா என்று எதிர்பார்க்கப்படுகிறது.