தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகிய காவல் நிலையங்களில் இருவேறு வழக்குகளில் இருவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

தனிப்படை போலீசார்  விசாரணை 

 

சென்னை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு நவீன் என்பவரது இருசக்கர வாகனம், அமீர் இக்பால் என்பவரது வீட்டிலிருந்த 20,000 ரூபாய் பணம், சானடோரியம் கோவில் உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை போலீசார்  விசாரணை நடத்தி வந்தனர்.



 

இரவு நேரத்தில் திறந்திருக்கும் வீடுகளில் 

 

இந்நிலையில் நேற்று லட்சுமிபுரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக திருடப்பட்ட வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் தான் பூந்தமல்லி பகுதியை சேர்ந்த டேவிட் பில்லா (எ) அருண் எனவும் இருசக்கர வாகனம் திருடியது மற்றும் இரவு நேரத்தில் திறந்திருக்கும் வீடுகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து இருசக்கர வாகனம், மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார். அவரை கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.



 

ரயில்வே துறையில் காலி இடங்கள்

 

அதே போல் மற்றொரு சம்பவத்தில் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார் 36 தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது நண்பர் ரயில்வே துறையில் வேலை பார்த்து வருவதாகவும் தற்போது ரயில்வே துறையில் காலி இடங்கள் உள்ளதால், வேலை வாங்கி தருவதாக சென்னையை சேர்ந்த ஏழு நபர்களிடம் பல்லாவரத்தில் உள்ள தனியார் விடுதியில் வைத்து தனிதனியாக ரூபாய் இருபத்தி ஏழு லட்சம் ரூபாய் வாங்கி கொண்டு ஏமாற்றியதாக பல்லாவரம் காவல் நிலையத்தில் பணத்தை பறிகொடுத்தவர்கள் அளித்த புகாரின் பேரில் ஜெயகுமார் என்பவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.