சென்னை நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் ரோகினி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


நகைக்கடை வியாபாரிகளை திருட்டு வழக்கில் சேர்ப்பதாக கூறி ரூ. 2 லட்சம் கேட்டு மிரட்டியதாக சென்னை நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் ரோகினி மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தின் காவலர்கள் 2 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து தற்போது காவல் ஆய்வாளர் ரோகினியும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.