வீடு புகுந்து நகைகளை திருடிய கர்ப்பிணி பெண் 

Continues below advertisement


சென்னை வியாசர்பாடி காந்திஜி தெருவில் உள்ள வாடகை வீட்டின் கீழ்தளத்தில் குடும்பத்துடன் வசிப்பவர் உமா ( வயது 36 ) டெய்லர் பணி புரிந்து வருகிறார். கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு உமா மற்றும் அவரது கணவர் வீட்டை பூட்டி வேலைக்கு சென்றனர். மாலை வீடு திரும்பும் போது, பீரோ வில் இருந்த 20 சவரன் நகைகள் திருட்டு போயிருந்தன. செம்பியம் போலீசாரின் விசாரணையில் , கர்நாடகா மாநிலம் வடக்கு பாரதி நகரைச் சேர்ந்த ஜெயந்தி ( வயது 34 ) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருடும் இவர் கர்நாடகாவில் இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார், தற்போது அவர் நிறை மாத கர்ப்பிணியாக இருப்பதால் அவரிடமிருந்து 7.5 சவரன் நகைகளை மட்டும் பறிமுதல் செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவித்தனர். 


200 சவரன் நகை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய அரசு ஊழியர்


சென்னை நொளம்பூ ரைச் சேர்ந்தவர் ஹாரிஸ் ( வயது 31 ) மின் வாரியத்தில் இள நிலை பொறியாளர். இவருக்கும். சூளைமேடைச் சேர்ந்த டிம்பிள் சங்கீதா ( வயது 26 ) என்பவருக்கும் பிப்ரவரி 2 - ல் திருமணம் நடந்தது. அப்போது பெற்றோர், சங்கீதாவிற்கு 100 சவரன் நகை கொடுத்துள்ளனர். தம்பதி சூளைமேடில் தனிக் குடித்தனம் நடத்தி வந்த நிலையில் , மேலும் 200 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் , சொத்து பத்திரம் உள்ளிட்டவற்றை கேட்டு மனைவி சங்கீதாவிடம் அவ்வப் போது ஹாரிஸ் தகராறு செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்னையில் சங்கீதாவை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பிய ஹாரிஸ் சூளைமேடு வீட்டை காலி செய்து நொளம்பூரில் தாயுடன் தங்கியுள்ளார்.


இந்நிலையில் சங்கீதா கணவருடைய வீட்டிற்கு சென்ற போது ஹாரிஸின் குடும்பத்தினர் அவரை தாக்கியுள்ளனர். இதையடுத்து வரதட்சணை கேட்டு கணவன் கொடுமைப்படுத்துவதாக அண்ணா நகர் மகளிர் போலீசில் சங்கீதா புகார் அளித்தார். போலீசார் மற்றும் சென்னை மாவட்ட வரதட்சணை தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர். அதன் அடிப்படையில் மனைவியை வரதட்சனை கேட்டு கொடுமைபடுத்திய ஹாரிஸை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மசாஜ் நிலையத்தில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய உரிமையாளர்


சென்னை விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் தனியார் மசாஜ் நிலையம் உள்ளது. இங்கு பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரையடுத்து , விருகம்பாக்கம் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவது உறுதியானது. இதையடுத்து கே.கே நகரைச் சேர்ந்த மசாஜ் நிலைய உரிமையாளர் சரவணன் ( வயது 41 ) பள்ளிக் கரணையை சேர்ந்த மேலாளர் எஸ்.சரவணன் பிராட்வேயை சேர்ந்த கிஷோர்குமார் ( வயது 25 ) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். ஸ்பாவில் தங்க வைக்கப்பட்டிருந்த மூன்று பெண்களையும் போலீசார் மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.