முடக்கு வாதம் - அரசு மருத்துவமனையில் சிகிச்சை


திருவொற்றியூர் ஜானகி அம்மாள் எஸ்டேட் பகுதியில் வசிப்பவர் அருள் வயது ( 47 ) டைலராக இருக்கிறார். இவரது மனைவி அம்சா வயது ( 40 ) இவருக்கு முடக்கு வாதம் வந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 16 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.


கதவுகள் திறக்கவில்லை


இந்த நிலையில் குடும்பத்தார் அனைவரும் சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டு கதவு திறக்காததால் உறவினர் தமிழ் என்பவர் கதவை தட்டி உள்ளார். அப்போது கதவு திறக்காததால் உள்ளே பார்த்த போது மூவரும் பேச்சு மூச்சு இன்றி கிடந்துள்ளனர். அக்கம் பக்கம் தமிழ் குரல் கொடுத்து மகன் , மகள் இருவரை மட்டும் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்று காண்பித்து உள்ளனர்.


அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி


டாக்டர்கள் பரிசோதித்து விட்டு இருவரும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இருவரின் பிரேதத்தையும் வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனர் இந்நிலையில் வீட்டில் தந்தையான அருளும் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அருள் அவரது மகளான ரம்யா, பாரதி மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் இவரது சகோதரர் ராஜேஷ் வயது ( 14 ) ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் மூவரும் தற்கொலை சேர்ந்து கொண்ட சம்பவம் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார் திருவொற்றியூர் ஆய்வாளர் ரஜினிஸ், அருள் , ரம்யா , ராஜேஷ் ஆகிய மூவரின் பிரேதத்தை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது