மெரினா கடற்கரை கண்ணகி சிலை பின்புறம் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 40 பேர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆந்திராவில் இருந்து எரிசாராயத்தை கடத்தி வந்து மெரினா கடற்கரை மணல் பரப்பில் புதைத்து வைத்து, விற்பனை செய்வதாக மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல் தலைமையிலான தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்அடிப்படையில், உதவி ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான தனிப்படையினர் மெரினா கடற்கரை பகுதியில் ரகசியமாக பொதுமக்கள் போல் இரவு நேரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, 3 வடமாநில பெண்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் மெரினா மணல் பரப்பில் புதைத்து வைத்திருந்த கேன் ஒன்றை வெளியே எடுத்தனர்.
இதை பார்த்து சந்தேகமடைந்த தனிப்படையினர் உடனடியாக விரைந்து சென்று மணல் பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட கேனை திறந்து பார்த்துள்ளனர். அப்பொழுது, அதில் 35 லிட்டர் எரிசாராயம் இருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தனிப்படையினர் உடனடியாக அந்த 3 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அந்த பெண்கள் மராட்டிய மாநிலத்தை 5 சேர்ந்த சுனந்தா, ஷில்பா போஸ்லே, ஜென்துஸ் கோஸ்லயா எனவும், இவர்கள் ஆந்திராவில் இருந்து பேருந்து மற்றும் ரயில் மூலம் சாராயத்தை கடத்தி சென்னை கொண்டு வந்துள்ளனர் எனவும் தெரியவந்தது. கடத்தி வரப்பட்ட கள்ள சாராயத்தை மெரினா கடற்கரையில் உள்ள மணல் பரப்பில் புதைத்து வைத்து, இரவு நேரத்தில் மெரினா மணல் பரப்பில் தூங்கும் முதியவர்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும், இவர்கள் பகல் நேரத்தில் கூலி வேலைக்கு செல்வதும், இரவு நேரத்தில் சாராய விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும், வெளியில் யாருக்கும் சந்தேகம் வராதபடி பழைய 'கூல் டிரிங்ஸ்' பாட்டில்களை விலைக்கு வாங்கிவந்து, அதில் சாராயத்தை நிரப்பி ஒரு பாட்டில் 750-க்கும் விற்பனை செய்து வந்துள்ளனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக இவர்கள் தனித்தனி குழுவாக பிரிந்து மெரினா கடற்கரையில் இரவு நேரத்தில் சாராயம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர், 3 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்து, அவர்களிடம் இருந்து 35 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்